டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

பிரிட்டிஷ் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தனது குறிப்பிட்ட மாடல் பைக்குகளுக்கு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. டிரையம்ப்பின் இந்த அறிவிப்பின் மூலம் அத்தகைய பைக்குகள் கூடுதல் உத்தரவாதத்துடன் சுமார் ரூ.2.8 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகின்றன.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

இந்நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகையின் மூலம் டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ், டைகர் 800 எக்ஸ்ஆர், டைகர் 1200 மற்றும் பொன்னிவில்லி டி100 போன்ற பைக்குகள் தள்ளுபடிகளை பெறுகின்றன. பணம் தள்ளுபடிகளை இந்த சலுகையில் இணைக்காத டிரையம்ப் நிறுவனம் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள பைக்குகளின் ஸ்டாக் உள்ளவரை தான் எனவும் தெரிவித்துள்ளது.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

2019 அக்டோபர் 27ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ள இந்த சலுகைகள் குறித்து டிரையம்ப் மோட்டார் சைக்கிளின் இந்தியாவிற்கான ஜிஎம் ஷூப் பாரூக் கூறுகையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள் உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகரமான தீபாவளியை கொண்டாடுவதற்கு வழி வகுக்கும் என நம்புகிறோம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றப்படியான பல தேர்வுகள் இந்த சலுகையில் உள்ளன.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

இங்கிலாந்திற்கு பயணம்& சாகச பைக் ரைடருக்கான பயிற்சி, பைக்கை மாற்றுதல்& மேம்படுத்துதலுக்கான சலுகைகள் மற்றும் விரைவாக பைக்கிற்கு உரிமையாளர் ஆகுவதற்கான கவர்ச்சிகரமான பொருளாதார சலுகைகள் போன்றவையும் இந்த விழாகாலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதப்பூஜையில் இருந்து தீபாவளி வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பைக்கை குறைந்த விலையில் வாங்குவதற்கு நீண்ட நாட்கள் உள்ளன என கூறினார்.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

ஷூப் பாரூக் கூறியுள்ளதன் படி, டிரையம்ப் டைகர் 1200 பைக்கை இந்த விழாகாலத்தில் வாங்குவதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் நகரத்தில் மிக சிறந்த பயிற்சியாளர்கள் பயிற்றுவிக்கும் சாகச வீரர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இதனுடன் அங்கே இருக்கும் ஹிங்க்லெ சிட்டியில் உள்ள டிரைபம்ப் தொழிற்சாலை முழுவதும் சுற்றி பார்ப்பதற்கான வாய்ப்பையும் பெறலாம்.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

மற்றொரு சலுகையை பெறும் பைக்கான டிரையம்ப் டைகர் 800எக்ஸ்ஆர்-க்கு ரூ.2.8 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எந்தவொரு மாடலையும் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பேக்கிங்கும் இலவசமாக செய்துதரப்படும். மேலும் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு வருடத்திற்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

இந்த சலுகையில் குறிப்பிடப்பட்டுள்ள டிரையம்ப் பொன்னிவில்லி டி100 பைக், ஐந்து வருட ஜீரோ சதவீத வட்டியில் ரூ.11,608க்கான இஎம்ஐ ஸ்கீம் உள்பட ரூ.1.75 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகிறது. இந்த இஎம்ஐ ஸ்கீம் உடன் ரூ.1.5 லட்சத்திற்கான எக்ஸ்சேன்ஞ் மானியம் அல்லது ரூ.1.75 லட்சத்தில் ஷோரூமின் ரசீது போன்ற சலுகைகளுக்கான தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

கடைசியாக டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ் மாடல் பைக் ரூ.1.59 லட்சம் வரையில் சலுகைகளை பெறுகிறது. இதில் 59,000 ரூபாய் மதிப்பிலான சைலன்ஸர் மற்றும் ரூ.70,000 மதிப்பிலான அப்கிரேட் போனஸ் அல்லது அம்பு வடிவிலான சைலன்ஸர், ரூ.1 லட்சம் மதிப்பிலான ஷோரூமின் ரசீது போன்றவை அடங்கும். டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ் அடுத்த ஆண்டு ஜனவரியில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read:விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்

டிரையம்ப் பைக்கை வாங்குவதற்கு இதுதான் சரியான தருணம்... தீபாவளி சலுகைகள் அறிவிப்பு

டிரையம்ப் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு இன்பம் தரும் செய்தியாக இருந்தாலும் இந்த சலுகைகள் அனைத்து பட்ஜெட்டில் பைக் வாங்க நினைப்போருக்கு கண்டிப்பாக ஒத்து வராது. இந்த சலுகைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் பிஎஸ்4 பைக்குகளுக்கு பதிலாக பிஎஸ்6 பைக்குகளை அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்த டிரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
In Diwali Triumph Announces Offers For On Select Motorcycles Up ₹ 2.8 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X