இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள்!

டிவிஎஸ் நிறுவனம் அதன் இரண்டு புதிய கான்செப்ட் மாடல் மோட்டார்சைக்கிள்களை அதிநவீன மற்றும் சக்தி வாய்ந்த ரியாலிட்டி மாடலாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

பட்ஜெட் விலையில் சிறப்பான மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் டிவிஎஸ் நிறுவனம், அதன் புதிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களை நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு புதிய மின் வாகனங்களை கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்திருந்தது. அதை தான் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில், கிரியோன் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஜெப்லின் எனப்படும் சக்தி வாய்ந்த க்ரூஸர் பைக்கினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

கிரியோன் ஸ்கூட்டரின் வடிவம் ஸ்போர்டியாக இருந்தாலும், அது சுற்றுப்புறச்சூழலின் நண்பனான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெப்லின் பைக் க்ரூஸர் ரகத்தில் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தின்மூலம் டிவிஎஸ் நிறுவனம் க்ரூஸர் ரக இருசக்கர வாகனச் சந்தையில் முதல்முறையாக களமிறங்க இருக்கிறது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டு காலமாக, அதன் கான்செப்ட் மாடல் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதில் மட்டுமே தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், கான்செப்ட் மாடலாக அறிமுகமான டிராகனை அபாச்சி ஆர்டிஆர்200 4வி என்ற மாடலாக சமீபத்தில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, அகுலா என்ற பெயரில் அறிமுகமான கான்செப்ட் மாடலை அப்பாச்சி ஆர்ஆர்310 மாடலாக அறிமுகம் செய்தது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

இவ்வாறு சமீபகாலமாக தனது கான்செப்ட் மாடல்களை ரியாலிட்டி மாடல்களாக அறிமுகம் செய்து வரும் டிவிஎஸ், மேலும் இரண்டு கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது உருவாகி வரும் இரண்டு புதிய மாடல்களும் இந்த ஆண்டு அல்லது வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் ஷோரூம்களை கலக்க வந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

டிவிஎஸ் கிரியான் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சக்தி வாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த எஞ்ஜின் 0-த்தில் இருந்து 80கிமீ என்ற வேகத்தை 5.1 விநாடியில் தொட்டுவிடும் திறன் வாய்ந்தது. மேலும், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை செல்லும்.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

மேலும், ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் திறன் வாய்ந்தது. இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் டெக்னாலஜியைக் கொண்ட தொழில்நுட்ப வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, ஸ்கூட்டரையை யாரேனும் திருடிச் சென்றுவிட்டால் எளிதில் கண்டுபிடித்துவிடும் வகையில் ஆண்டி தெஃப்ட் நேவிகேஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்கள், ரிஜெனரேடிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் பார்க்கிங் அசிஸ்டண்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

இதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டுள்ளது. இது, ஸ்பீடோ மீட்டர், பேட்டரி பவர் மற்றும் பவரின் திறன் ஆகியவற்றைக் காட்டும். மேலும், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஓடோ மீட்டர் ஆகியவற்றையும் காண்பிக்கும். இத்தகைய வசதிகளால், இந்த ஸ்கூட்டர் வெளிநாடுகளில் இறக்குமதியாகும் மின்ஸ்கூட்டர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடமே சாலையை கலக்க வருகிறது 2 அதிநவீன டிவிஎஸ் வாகனங்கள்...? சிறப்பு தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளே...!

இதேபோன்று, டிவிஎஸ் ஜெப்லின் க்ரூஸர் பைக்கும் அதிநவீன மற்றும் சக்தி வாய்ந்த மாடலாக உருவாகியுள்ளது. அந்த வகையில், இந்த பைக்கில் 220சிசி கொண்ட பெட்ரோலால் இயங்கும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 20 பிஎச்பி பவரையும், 18.5 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளில் தொழில்நுட்ப வசதியாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, எல்இடி ஹெட்லைட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Creon Electric Scooter & Zeppelin Motorcycle Launch Expected This Financial Year. Read In Tamil.
Story first published: Thursday, April 11, 2019, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X