ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் டிவிஎஸ் நிறுவனம் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

இதில், டிவிஎஸ் ரேடானும் (TVS Radeon) ஒன்று. வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் (Commuter Motorcycle) மாடலாக டிவிஎஸ் ரேடான் திகழ்கிறது. டிவிஎஸ் ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில், 109 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ரேடான் மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

அத்துடன் ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் 18 இன்ச் அலாய் வீல்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்குகிறது. டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்படுகின்றன. ஓரளவிற்கு நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ரேடான் சுமார் 8 மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்டது.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

அப்போது கருப்பு, வெள்ளை, கோல்டு மற்றும் பர்ப்பிள் ஆகிய 4 வண்ணங்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியது. இந்த சூழலில் தங்களின் 110 சிசி கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் மாடலான ரேடானில் டிவிஎஸ் நிறுவனம் 2 புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

இனி வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் ரேடான் மோட்டார்சைக்கிள் சிகப்பு மற்றும் க்ரே ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். ஆனால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே 50,070 ரூபாய் என்ற விலையில் டிவிஎஸ் ரேடான் கிடைக்கும். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் புதிய வண்ணங்களில் டிவிஎஸ் ரேடான் மோட்டார்சைக்கிள் கிடைக்கும். டிவிஎஸ் நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேடான் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ரேடான் மோட்டார்சைக்கிள் மாடலில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்தது டிவிஎஸ்...

1 லட்சம் என்ற மைல்கல் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே எட்டப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் ரேடான் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. இதன் ஸ்டைலான தோற்றம், நல்ல மைலேஜ், சிறப்பான வசதிகள் உள்ளிட்டவை டிவிஎஸ் ரேடான் மோட்டார்சைக்கிளை கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக மாற்றுகின்றன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Introduced 2 New Colour Options In Radeon. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X