கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

வரும் 1ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் நவீன பிரேக் சிஸ்டத்தை கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது. 125சிசி திறன் வரையிலான இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும், 125சிசி ரகத்திற்கு மேலான மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைக்கு ஒப்பாக அனைத்து நிறுவனங்களும் இருசக்கர வாகனங்களை மேம்படுத்தி களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், டிவிஎஸ் விக்டர் பைக் தற்போது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

இதனை சிங்ரனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் (SBT) என்ற பெயரில் குறிப்பிடுகிறது டிவிஎஸ் மோட்டார்ஸ். இந்த பைக்கின் டிரம் பிரேக் மாடல் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் எஸ்பிடி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

இந்த புதிய சிபிடி பிரேக்கிங் சிஸ்டத்தின் மூலமாக இரண்டு சக்கரங்களுக்கும் பிரேக்கிங் திறன் குறிப்பிட்ட விகிதத்தில் செலுத்தப்படும். இதனால், வண்டி நிலைகுலையாமல், விரைவாக நிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். சாதாரண பிரேக் சிஸ்டத்தை விட 10 சதவீதம் குறைவான நிறுத்துதல் தூரத்தையும் ஓட்டுபவர் பெறும் வாய்ப்பு கிட்டும்.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

புதிய பிரேக் சிஸ்டம் தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 110சிசி ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் விக்டர் 110 பைக்கில் நீளமான இருக்கை அமைப்பு, தங்க வண்ண எஞ்சின் கேஸ், கிராஷ் கார்டு, அட்டகாசமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஸ்பிரங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் பிளாக் கோல்டு, ரெட் கோல்டு, மேட் புளூ மற்றும் மேட் சில்வர் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் டிரம் பிரேக்குடன் கூடிய சிபிடி மாடலுக்கு ரூ.54,682 எக்ஸ்ஷோரூம் விலையாகவும், டிஸ்க் பிரேக் மாடலுக்கு ரூ.57,662 விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company has introduced Synchronized Braking Technology (SBT) in its executive commuter motorcycle - TVS Victor today.
Story first published: Friday, March 29, 2019, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X