டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கிய விபரங்கள்!

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் மற்றும் அறிமுக விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக்கின் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே, பார்வையாளர்களை இந்த பைக் வெகுவாக கவர்ந்தது. புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள், வித்தியாசமான ஸ்டைலிங்கில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத் துவக்கத்தில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டிவிஎஸ் ஸெப்பெலின் பைக் கான்செப்ட் மாடல் ஆர்வத்தை தூண்டியதற்கான மிக முக்கிய காரணம், இது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இருந்ததுதான். இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 220 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் மற்றும் ஐஎஸ்ஜி எனப்படும் விசேஷ ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் 220 சிசி எஞ்சின் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

இது ஹைப்ரிட் மாடலில் வராது என்ற தகவல் ஏமாற்றத்தை அளித்தாலும், இதன் எஞ்சின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் போர் செய்யப்பட்டு 220 சிசி எஞ்சினாக மாற்றப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

இந்த பைக்கில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் கூடிய டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் இருக்கும். இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

புதிய டிவிஎஸ் ஸெப்பெலின் பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பெல்ட் டிரைவ் சிஸ்டம், பைரெல்லி டயர்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் இந்த சிறப்பு அம்சங்கள் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது.

MOST READ: டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் ஸெப்பெலின் க்ரூஸர் பைக் பற்றிய முக்கி விபரங்கள்!

அதேநேரத்தில், சவுகரியமான இருக்கை அமைப்பு, அனலாக்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாம். இது பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Zeppelin cruiser bike is expected to launch by the end of January 2020 or in early February.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X