அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

பிரபல யுஎம் நிறுவனம், அதன் மோட்டார்சைக்கிள்களை இந்திய சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

அமெரிக்காவைச் சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் கிளாசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட ரகத்திலான பைக்குகளை உலக நாடுகள் முழுவதிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில், இந்நிறுவனம் இந்தியாவிலும் சில மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது.

இந்நிலையில், அட்வென்சர் டூரர் ரகத்திலான இரண்டு புத்தம் புதிய மாடல் மோட்டார்சைக்கிளை, அந்த நிறுவனம் இந்தியா சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

இதில், ஒன்று அந்த நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரோமட் ஏடிவி 125 எஃப்ஐ புரோ மாடலைப் போன்று காட்சியளிக்கின்றது. மற்றொன்று, சாலை மற்றும் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏதுவான மாடலைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த இரு மாடல் மோட்டர்சைக்கிள்குறித்த புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

இந்தியச் சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வரும், யுஎம் நிறுவனத்தின் இந்த இரு மாடல்களும், அதன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஸ்பை படத்தின்மூலம், அந்த நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட நடுத்தர எடைக்கொண்ட அட்வென்சர் ரகத்திலான பைக்குகளை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகின்றது.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஸ்பை படத்தில் இருக்கும் இரண்டு பைக்குமே ஒரே மாதிரியான பிம்பத்தை வழங்குகின்றன. இருப்பினும், இந்த இரு மாடல்களுக்கும் இடையே கணிசமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், இரு மாடல்களுக்கும் இடையே ஹெட்லேம் மற்றும் ப்யூவல் டேங்க் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்டவை வித்தியாசமாக இருக்கின்றன.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

அந்தவகையில், ஒரு பைக்கில் பெரிய அளவிலான விண்ட்ஷீல்ட் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை மற்றும் ஆஃப்-ரோடு பயணத்திற்கு ஏதுவான ஸ்போக்ஸ் வீல்கள், முன்பக்கத்தில் சேன்ஸ் ஃபென்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மற்றொன்றில், உயர்த்தப்பட்ட முன்பக்க ஃபென்டர், காம்பேக்ட் விண்ட்ஷீல்ட் மற்றும் அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

இத்துடன், இந்த பைக்கில் ஸ்டாண்டர்டு டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவையே இந்த இரு மாடல்களுக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கின்றன. அதேசமயம், இந்த இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் அமைப்புதான் இடம் பெற்றுள்ளன. அந்தவகையில், அந்த பைக்குகளின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், பின்பக்கத்தில் எந்தவிதத்திலான ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

அதேசமயம், யுஎம் நிறுவனத்தின் இந்த பைக்குடன், மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ மோட்டார்சைக்கிளின் ஸ்பை படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. யுஎம் நிறுவனம் தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் அட்வென்சர் ரகத்திலான மோட்டார்சைக்கிள்கள்குறித்த எந்தவொரு தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

ஆனால், அந்த நிறுவனம் டிஎஸ்ஆர் அட்வென்சர் 200 மற்றும் சில் 150 ரெட்ரோ-கிளாசிக் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் 2019ம் ஆண்டிற்குள் இந்தியச் சந்தையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், யுஎம் நிறுவனத்தின் ஒரு எந்தவொரு மாடலும் ஒரு யூனிட்கூட கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் விற்பனைச் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அட்வென்சர் ரக யுஎம் பைக்குகளின் ஸ்பை கசிந்தன... ஹீரோ எக்ஸ்பல்ஸுக்கு போட்டியாக களமிறங்குகிறதா...?

இது அந்த நிறுவனத்திற்கு பெரும் விற்பனை வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. ஆகையால், புதிய மாடல்களை களமிறக்கி அதன் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணி வருகின்றது. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த அட்வென்சர் ரக பைக் ஹீரோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

source: Rushlane

Most Read Articles
English summary
New UM Adventure Tourer Spied — Will It Rebuild The Brand In India? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X