யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் க்ரூஸர் பைக் தயாரிப்பில் பிரபலமானது. கடந்த 2016ம ஆண்டு லோஹியா நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை களமிறக்கியது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் யுஎம் நிறுவனத்தின் ரெனிகேட் பிராண்டில் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமானது. ரெனிகேட் ஸ்போர்ட் எஸ், கமாண்டோ, மோஜவ் மற்றும் கிளாசிக் ஆகிய பெயர்களில் இந்த மாடல்கள் வந்தன.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

இந்த மோட்டார்சைக்கிள்களில் 279.5 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.8 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுள்ளது. யுஎம் மாடல்கள் ரூ.1.68 லட்சம் முதல் ரூ.2.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் நிலைநிறுத்தப்பட்டன.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

ராயல் என்ஃபீல்டு 350 சிசி மாடல்களை குறிவைத்து களமிறக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் 125 சிசி ரகத்திற்கு மேலான பைக் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொண்ட மாடல்களை உரிய நேரத்தில் அறிமுகம் செய்ய யுஎம் நிறுவனம் தவறிவிட்டது. இதனால், அந்நிறுவனத்தின் விற்பனை முற்றிலுமாக நின்றுபோனது. கடந்த மார்ச் மாதம் வெறும் 12 மோட்டார்சைக்கிள்களை அந்நிறுவனம் விற்பனை செய்தது. அதன்பிறகு ஏபிஎஸ் இல்லாமல் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

பல மாதங்களாக விற்பனை நின்றுபோனதால், சில டீலர்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால், ஏற்கனவே யுஎம் மோட்டார்சைக்கிள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

இந்த நிலையில், ஏபிஎஸ் வசதியுடன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கு யுஎம் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. மேலும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மோட்டார்சைக்கிள்களை களமிறக்கவும், புதிய மாடல்கள் மூலமாக வர்த்தகத்தை ஸ்திரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு ஏபிஎஸ் மூலமாக வந்த பெரும் சோதனை!

யுஎம் நிறுவனத்தின் டிஎஸ்ஆர் அட்வென்ச்சர் 200 என்ற புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த அட்வென்ச்சர் டூரர் மாடலாக இந்தியர்களை கவரும் வாய்ப்பு இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
UM Motorcycles has discontinued their sales in India. The brand which sold the Renegade cruiser has stopped its operations in the country due to low sales and lower demand.
Story first published: Wednesday, July 3, 2019, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X