முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன!

இருசக்கர வாகன தயாரிப்பில் ஜம்பவானாக திகழ்ந்து வரும், பஜாஜ் அதன் அர்பனைட் ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான பணியல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

பஜாஜ் அர்பனைட்

பஜாஜ் நிறுவனம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக அந்த நிறுவனம், அர்பனைட் என்னும் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாகவும், அதுகுறித்த வரைபடத்தையும் அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் இந்த அர்பனைட் ஸ்கூட்டரை அந்த நிறுவனம் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் கசிந்து, அதன் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை டீம்பிஎச்பி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இருசக்கர வகான தயாரிப்பில் முக்கியத்துவம் செலுத்தி வரும் பஜாஜ் நிறுவனம், செடாக் என்ற ஸ்கூட்டரை 1972ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும், இதன் உற்பத்தியை கடந்த 2006ம் ஆண்டு முதல் நிறுத்தியது. ஆகையால், இந்த ஸ்கூட்டர்தான் இந்த நிறுவனம் அறிமுகம் செய்த முதலும் கடைசியுமான ஸ்கூட்டராக தற்போது வரை இருந்தது.

ஆனால், இதனை மாற்றும் விதமாக அந்த நிறுவனம் தற்போது அர்பனைட் எனும் புதிய ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை தொழில்நுட்பம், ஸ்டைல் என தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதேசமயம், இந்த அர்பனைட் ஸ்கூட்டரின் பவர், டார்க் உள்ளிட்ட மற்ற விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேசமயம், இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டில் உருவாகி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் அர்பனைட்

இந்த ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப வகையில், இந்த ஸ்கூட்டரை அந்த நிறுவனம் புனே நகரத்தில் உள்ள சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள்தான் ஆட்டோ உலகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

பிரத்யேகமாக பாரம்பரியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், நவீனத்திற்கு குறைச்சலின்றி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த அர்பனைட் ஸ்கூட்டர், பழைய செடாக் ஸ்கூட்டரை தற்போதைய நவீன யுகத்திற்கு மாற்றியமைத்தவாறு வடிவமைத்தால் எப்படி காட்சியளிக்குமோ அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த லுக் மிகவும் ரம்மியமான காட்சியை அதற்கு வழங்குகிறது.

Most Read Articles

English summary
Upcoming Bajaj Urbanite Scooter Spy Pics. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X