சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

சுஸுகி நிறுவனத்தின் புதிய ஜிக்ஸெர் பைக் குறித்த ஸ்பை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

சுஸுகி நிறுவனம், அதிக அளவில் எதிர்பார்ப்பில் இருந்த இரண்டு புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ஆகிய இரு மாடல்களைதான் அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

இதில், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக் சுஸுகி நிறுவனத்தின் மூலம், இந்தியாவில் களமிறக்கப்பட்ட பிரீமியம் ரகத்திலான மலிவு விலையைக் கொண்ட முதல் பைக் ஆகும். இந்நிலையில், அந்த நிறுவனம் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை நேக்கட் வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

ஜிக்ஸெர் 250 என்ற பெயரில் களமிறங்கும் இந்த பைக், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலின் எஞ்ஜின் மற்றும் சில தொழில்நுட்பங்களைப் பெற இருக்கின்றது. ஆனால், இந்த புதிய வெர்ஷனை இலகுவான மாடலாகவும், ஸ்ட்ரீட்பைட்டர் லுக்கிலும் சுஸுகி நிறுவனம் தயார் செய்கின்றது. இந்த பைக்கின் அறிமுகம் தேதி குறித்த மற்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

இருப்பினும், புதிய ஜிக்ஸெர் 250 பைக் குறித்த இரண்டு ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவ்வாறு, அதன் ஸ்பை புகைப்படங்களை மோட்டாராய்ட்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. மேலும், அது வெளியிட்டுள்ள செய்தியில், சுஸுகி நிறுவனத்தின் இந்த பைக் வருகின்ற மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளது.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

இந்த நேக்கட் 250சிசி ஜிக்ஸெர் பைக் அதிகபட்சம் இந்த வருடத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன், எஞ்ஜின், சேஸிஸ் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை அதன் அழகிய வெர்ஷனான ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலில் இருந்து பெற இருக்கின்றது. ஆனால், இந்த பைக் குறித்த மற்ற சில தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றது.

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

ஆனால், இந்த பைக்கில் நிறுவ இருக்கும் 250சிசி திறன் கொண்ட எஞ்ஜின் 9,000 ஆர்பிஎம்மில் 26.5 எச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கூரியவாறு இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம் பெறும்.

MOST READ: யாரென்றே தெரியாத பெண்ணுடன் நடுரோட்டில் அட்டகாசம் செய்த வாலிபரின் வீடியோ வைரல்... அதிர்ச்சி பின்னணி

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

இத்துடன், இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் உள்ளிட்டவை இதில் இடம் பெற இருக்கின்றன. மேலும், பாதுகாப்பு வசதிகளாக ஜிக்ஸெர் 250 பைக்கில், இரண்டு டிஸ்க் பிரேக்குடன் கூடிய ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

அதேபோன்று, முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டாக்கோமீட்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், கிராப் ரெயிலுடன் கூடிய ஸ்பிளிட் இருக்கை மற்றும் டயர் ஹக்கர் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. மேலும், இதில் 12 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பெட்ரோல் டேங்க், முன்பக்க சக்கரத்திற்கு 110/70R - 17 இன்சிலான டயரும், பின்பக்க சக்கரத்திற்கு 150/60R - 17 இன்சைக் கொண்ட டயரும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை ட்யூப் லெஸ் டயர்களாகும்.

MOST READ: பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

சுஸுகி ஜிக்ஸெரின் அடுத்த புதிய மாடல்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை புகைப்படங்கள்!

சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஜிக்ஸெர் 250 பைக், இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்குமேயானால், கேடிஎம் ட்யூக் 250 மற்றும் எப்இசட் 25 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும். அதற்கேற்ப வகையில், இந்த பைக் ரூ. 1.5 லட்சம் மதிப்பில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Upcoming Suzuki Gixxer 250 Images Leaked. Read In Tamil.
Story first published: Thursday, June 13, 2019, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X