மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

2 புத்தம் புதிய பல்சர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் தற்போது களத்தில் இறக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்று பல்சர். கடந்த 2001ம் ஆண்டு முதல் பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆண்டுகளை கடந்த பின்பும் கூட பல்சர் மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்தபாடில்லை.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

எனவே பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்குகளில் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதன்படி அப்டேட் செய்யப்பட்ட பல்சர் 150 மற்றும் பல்சர் 180 பைக்குகளின் 2019 வெர்ஷனை, பஜாஜ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

2019 வெர்ஷன் பல்சர் 150 மற்றும் பல்சர் 180 பைக்குகளில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி (Antilock Braking System-ABS) வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு பைக்குகளிலும் மெக்கானிக்கலாக வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக்குகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இந்த உத்தரவிற்கு இணங்கும் வகையில், 125 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும், ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கும் நடவடிக்கைகளில் இரு சக்கர வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இதன் ஒரு பகுதியாகதான் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய பல்சர் 150 மற்றும் பல்சர் 180 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக இரு பைக்குகளின் விலையும் அதிகரித்துள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

ஏபிஎஸ் வசதி இல்லாத பல்சர் 150 பைக்கின் விலை ரூ.80,794. ஆனால் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய புதிய 2019 பல்சர் 150 பைக்கின் விலை ரூ.87,226. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய மாடலின் விலை சுமார் ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இதேபோல் பல்சர் 180 பைக்கின் விலையும் சுமார் ரூ.7 ஆயிரம் உயர்ந்துள்ளது. ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத பழைய பல்சர் 180 பைக்கின் விலை ரூ.85,823. ஆனால் ஏபிஎஸ் வசதி இடம்பெற்றுள்ள புதிய 2019 மாடல் பல்சர் 180 பைக்கின் விலை ரூ.92,563. இவை அனைத்தும் மும்பை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

பல்சர் 150 பைக்கில், 149 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவர் மற்றும் 13.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

அதே நேரத்தில் பல்சர் 180 பைக்கில், 180 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 16.8 பிஎச்பி பவர் மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இந்த சூழலில் பல்சர் பிராண்டின் கீழ் பல்வேறு புதிய பைக்குகளை களமிறக்க பஜாஜ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மார்க்கெட்டிற்கான புத்தம் புதிய பல்சர் சீரீஸை களமிறக்கும் பணியில் பஜாஜ் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் மார்க்கெட்டை கலக்க தயாரான பஜாஜ்... 2 புதிய பல்சர் பைக்குகளை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இளைஞர்களின் இதய துடிப்பாக விளங்கும் பல்சருக்கு புது ரத்தம் பாய்ச்சுவதால், போட்டி நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இதுதவிர அப்டேட் செய்யப்பட்ட டோமினார் 400 பைக்கையும் பஜாஜ் விரைவில் இந்திய மார்க்கெட்டில் லான்ச் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Updated 2019 Version Of The Pulsar 150, Pulsar 180 Officially Launched With ABS. Read in Tamil
Story first published: Monday, February 4, 2019, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X