கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

கடந்த 1ந் தேதி முதல் புதிய இருசக்கர வாகனங்களில் சிசி திறன் அடிப்படையில் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 125சிசி திறனுக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், அதற்கு மேலான சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இருப்பது அவசியம்.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

இந்த புதிய விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், பியோஜியோ நிறுவனம் தனது கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய மாடல்கள் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

வெஸ்பா பிராண்டில் வெஸ்பா நோட், வெஸ்பா எல்எக்ஸ்124 வெஸ்பா விஎக்ஸ்எல்125, வெஸ்பா எஸ்எக்ஸ்எல்125, வெஸ்பா இசட்எக்ஸ்125, வெஸ்பா எஸ்எக்ஸ்ல்150, வெஸ்பா எலிகண்ட், வெஸ்பா ரெட் ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

ஏப்ரிலியா பிராண்டில் எஸ்ஆர் 125, எஸ்ஆர் 150 ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்கூட்டர்கள் அனைத்திலும் தற்போது சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் வசதி திறன் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

இதுதவிரவும், சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் சேர்க்கப்பட்ட வெஸ்பா அல்லது ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் மூலமாக ரூ.6,000 மதிப்புடைய சலுகைகளையும் பியாஜோ அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பியோஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டியாகோ கிராஃபி," மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய விதிகளுக்கு உட்பட்டு எங்களது வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தி இருக்கிறோம்.

கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

இது நிச்சயம் இருசக்கர வாகன போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவோம். கடந்த ஆண்டே எங்களது தயாரிப்புகள் ஏபிஎஸ் சிஸ்டத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுவிட்டது. இப்போது நாடுமுழுவதும் இருக்கும் தேவையை மனதில் வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம்," என்று கூறினார்.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Piaggio has Launched ABS & CBS complaint Vespa and Aprilia scooters in India today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X