நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, ஹிமோ டி1 என்ற இ-மொபட்டினை சைனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-மொபட்டின் விலை மற்றும் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சியோமி நிறுவனம், பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களைச் சந்தையில் விற்பனைச் செய்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் அண்மைக் காலங்களாக, நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கேட்ஜெட்களையும் தயாரித்து வருகிறது.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில், எம்ஐ டிவி, வாட்ச், கெட்டில், ஸ்மார்ட் ஷூ, இயர்போன், ஸ்பீக்கர், வைஃபை உள்ளிட்டவற்றை சியோமி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனம் தற்போது பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

அவ்வாறு, அண்மையில் ஹிமோ சி20 எனும் இ-சைக்கிளைத் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு சைனாவில் விற்பனையாகி வருகிறது.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், பேட்டரியால் ஓடும் இ-மொபட் ஒன்றினையும் சியோமி நிறுவனம் புதிதாக சைனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபட்டிற்கு ஹிமோ டி1 என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.31,477 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

READ MORE: புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஹிமோ டி1 மொபட்டில் 670Wh சக்தியை சேகரித்து வைத்துக் கொள்ளும் வகையில் 14Ah கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை செல்லலாம். மேலும், ஹிமோ டி1 மொபட் 28Ah பேட்டரியைக் கொண்ட வேரியண்டாகவும் கிடைக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், இந்த இ-மொபட்டில் நவீன வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இ-மொபட்டின் வேகம், கிலே மீட்டர்கள், பேட்டரி பவர் மற்றும் சார்ஜிங் அளவு ஆகியவை குறித்த தகவலை பெற்றுக்கொள்ளலாம். இத்துடன், இரவில் பயணம் செய்வதற்கு ஏற்ப எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மொபட்டின் முன்பக்கத்திற்கு பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பின்பக்கத்தில் டியூவல் கோயிலவர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர, பைக்குகளில் இருப்பைத்போன்று, முன்சக்கரத்தில் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றுடன், இ-மொபட்டில் பிரத்யேக வசதியாக, சார்ஜ் தீர்ந்துவிட்டால், பெடல் செய்து செல்லும் வகையில் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டாலும்கூட பெடல் செய்தே வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று சேர்ந்துவிடலாம். இந்த மொபட்டின் மொத்தம் எடையே வெறும் 53 கிலோ என்பதால் இதனை கையாள்வது மிகவும் சுலபமானதாக இருக்கும். இது தற்போது சீனாவில் மட்டும் தான் விற்பனைக்கு வந்துள்ளது.

READ MORE: இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால், இதனை அனைவரும் வாங்கும் வகையில் இ-காமர்ஸிலும் (ஆன்லைன் ஷாப்பிங்) விற்பனைச் செய்யப்பட உள்ளது. இதனால், இந்தியர்கள் சியோமியன் அஃபீஷியல் சைட்டிற்கு சென்று இ-மொபட்டினை புக் செய்துகொள்ளலாம்.

இந்த இ-மொபட் சிவப்பு, சாம்பல், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Xiaomi Himo T1 e-Moped Unveiled In China. Read In Tamil.
Story first published: Thursday, April 25, 2019, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X