புதிய மினி எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது ஸியோமி நிறுவனம்!

ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் பிரபலமான ஸியோமி நிறுவனம் மடக்கும் வசதியுடன் கூடிய அடக்கமான வகை மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

ஸியோமி ஹிமோ எச்1 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மினி எலெக்ட்ரிக் பைக் கார்களில் எடுத்துச் சென்று பெரிய நிறுவன வளாகங்கள், பூங்கா பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த புதிய மடக்கி வைக்கும் வசதி கொண்ட ஹிமோ எச்1 எலெக்ட்ரிக் பைக் மிக எளிமையான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

சிறிய இருக்கை, சக்கரங்கள், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹேண்டில்பார் உறுதியான அடிச்சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் 14.5 கிலோ எடை கொண்டது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 75 கிலோ எடையுடையவர்கள் பயணிக்க முடியும்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

எல்இடி விளக்கு, வாட்டர் புரூஃப் வசதியுடன் கூடிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இருக்கும் 7.5Ah பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 6 மணிநேரம் பிடிக்கும்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

கையில் எடுத்துச் சென்று வேண்டும்போது பயன்படுத்தும் வகையில் இந்த எலெக்ட்ரிக் மினி பைக் ஃபோல்டபிள் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிக எளிதாக மடக்கி வைக்கவும், விரித்து பயன்படுத்தலாம். இதன் சிறப்பான லாக்கிங் சிஸ்டம் மூலமாக இந்த மினி எலெக்ட்ரிக் பைக் முழுமையான, உறுதியான கட்டமைப்பை சில வினாடிகளில் பெற்றுவிடும்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

சிறியதாக இருந்தாலும், இருக்கை அமர்ந்து செல்வதற்கு சொகுசாக இருக்கும். அதேபோன்று, கால் வைப்பதற்கு சிறிய ஃபுட் ரெஸ்ட்டும் இந்த மினி பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஃபுட்ரெஸ்ட்டை பெடல் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

புதிய ஸியோமி ஹிமோ எச்1 மினி எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.30,500 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மினி எலெக்ட்ரிக் பைக்கை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்க முடியும்.

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய ஸியோமி!

ஆனால், அதற்குரிய வரி உள்ளிட்டவற்றுடன் இந்த மினி எலெக்ட்ரிக் பைக்கின் விலை அதிகமாக இருக்கும். பெரிய வளாகங்களை கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இது ஏதுவாக இருக்கும் என்பதால், ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

Most Read Articles
English summary
Smartphone manufacturer Xiaomi has just launched its all new Himo H1 electric bicycle. The bicycle has been designed keeping portability in mind. Priced at USD 425 (roughly Rs 30,520) the Himo H1 weighs a total of 13 kilograms, and folds smaller than an A3 sized sheet of paper.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X