புதிய யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையிலான நேக்கட் ரக மாடலாக எம்டி-15 பைக் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. யமஹா ஆர்15 பைக்கிற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

இந்த நிலையில், யமஹா ஆர்15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடந்த மேடையில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த பைக் மாடலானது மிக அட்டகாசமான புதிய வண்ணத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

எனினும், இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, கூடுதலாக ஐஸ் புளூவ் வெர்மில்லியன் என்ற அட்டகாசமான புதிய வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்திலான எம்டி-15 பைக்தான் நேற்று நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

MOST READ: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் புதிய டிசைனிலான எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு ஸ்டான்டு போட்டிருந்தால், எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத தொழில்நுட்ப வசதியும் உள்ளது. ரேடியல் டயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார்...?

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: வானில் 2 விமானங்கள் சந்தித்து கொண்டால் பைலட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாத உண்மை

யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-6 மாடல் வெளியீடு!

புதிய யமஹா எம்டி-15 பைக்கின் பிஎஸ்-4 மாடல் ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதிய பிஎஸ்-6 மாடலின் விலை ரூ.4,000 கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has unveiled the new MT-15 bike with BS6 compliant engine in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X