மழைக்கு முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

மழைக்காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், யமஹா நிறுவனம், சர்வீஸ் கேம்ப் ஒன்றை தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

இந்தியாவில் மழைக் காலம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவை நாட்டின் சில பகுதிகளில் மழைக் காலம் முன் கூட்டியே துவங்கிவிட்டது. இந்நிலையில், யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், மழைக் காலத்திற்கு முன் கூட்டியே, அதன் பைக்குகளை செக் அப் செய்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மோட்டாராய்டு ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

யமஹா நிறுவனம், இந்த கேம்பினை நாடு முழுவதும் உள்ள அதன் டீலர்கள் மூலம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த கேம்ப் நாளை முதல் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மழைக் காலத்தில் கவனிக்க வேண்டிய 14 முக்கிய புள்ளிகள் அடிப்படையிலான இலவச செக் அப் மேற்கொள்ளப்பட உள்ளது.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

இந்த 14 புள்ளிகள் அடிப்படையிலான இலவச பரிசோதனையுடன், வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், ஹெல்மெட், உதிரிபாகங்கள், குறைவான லேபர் சார்ஜ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதில் யமஹா நிறுவனம் சிறப்பான பங்கினை ஆற்றி வருகிறது.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

அவ்வாறு வாடிக்கையாளர்களை சிறப்பானை சேவையை அளிக்கும் விதமாக, அந்த நிறுவனம், நாடு முழுவதும் 2,200 வாடிக்கையாளர்கள் டச் பாயிண்டையும், 500 டீலர்களையும் நிர்வகித்து வருகின்றது. மேலும், இந்த நிறுவனம் நாட்டில் மூன்று உற்பத்தி தொழிற்சாலையை இயக்கி வருகிறது.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

உபி மாநிலத்தின் சூரஜ்பூரிலும், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இந்த நிறுவனம், பைக்குகளை உற்பத்திச் செய்து வருகின்றது. இங்கிருந்துதான் உள்நாட்டு தேவைக்காகவும், வெளிநாடுகளின் ஏற்றுமதிக்காவும் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

யமஹா நிறுவனத்தின் இந்த சிறப்பு கேம்ப் குறித்து அந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணைத் தலைவர் ரவீந்தர் சிங் கூறியாதவது, "இருசக்கர வாகன உற்பத்தியாளரின் ஓர் பொறுப்பாக, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியினை யமஹா நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்தார்.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

மேலும் பேசிய அவர், "யமஹா நிறுவனத்தின் பைக்குகளில் பாதுகாப்பு குறைவான பாகங்கள், மிக குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பரிசோதனை முகாம், மழைக் காலங்களில் ரைடருக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க உதவும். அதற்கேற்ப, சலுகை விலையில் சர்வீஸ் மற்றும் மலிவு விலையில் பாகங்கள் உள்ளிட்டவற்றை மழைக் காலத்திற்கு முன்னதாகவே மாற்றிக் கொடுக்கும் வகையில் இந்த கேம்ப் நடைபெற இருக்கின்றது" என தெரிவித்தார்.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

யமஹா நிறுவனம், அண்மையில் அதன் புதிய தயாரிப்பான எம்டி15 பைக்கின் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் ஹெல்மெட் அல்லது ரைடிங் ஜாக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. அவ்வாறு, முன்னதாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எம்டி15 பைக்கை வாங்கிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மழை காலம் முன்பே பைக்குகளை அழைக்கும் யமஹா...! எதற்கு தெரியுமா...?

155சிசி திறன்கொண்ட எம்டி15 பைக்கை யமஹா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்தே இந்த இலவசங்களை வழங்க யமஹா நிறுவனம் திட்டமிட்டது. சிங்கிள் எஃப்ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் எஞ்ஜின்கள் 19.3 பிஎஸ் பவரையும், 15 என்எம் டார்க்கையுவம் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இது ரூ.1.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Organize Pre-Monsoon Check-Up Camp. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X