2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

பிஎம்டபிள்யூவின் மலிவான அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜி 310 ஜிஎஸ் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இந்த 2020 அக்டோபர் மாத துவக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்6 ஜி310 ட்வின் பைக்குகளை இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ட்வின் பைக்குகளில் ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் உள்ளிட்ட பைக்குகள் அடங்குகின்றன.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இவற்றில் ஜி310 ஆர் மலிவான பிஎம்டபிள்யூ பைக்காக பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் மற்றும் அப்டேட்டான வசதிகள் உடன் கொண்டுவரப்பட்ட இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளிலும் பிஎஸ்6 தரத்தில் என்ஜின் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இவை இரண்டிற்கும் புதிய வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

நேற்றுவரை இவற்றின் டெலிவிரிகள் துவங்கப்படாமல் இருந்த நிலையில் இன்று மும்பையை சேர்ந்த கார்சன் தாகூர் என்பவர் இந்தியாவில் முதல் ஆளாக அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார். அட்வென்ஜெர் ரக மோட்டார்சைக்கிளான இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.85 லட்சமாகும்.

அதுவே பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் விலை இதனை காட்டிலும் சுமார் 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ரூ.2.45 லட்சமாக உள்ளது. ஆனால் இவற்றின் பிஎஸ்4 வெர்சன்களின் விலைகள் முறையே ரூ.2.99 லட்சம் மற்றும் ரூ.3.49 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இந்த வகையில் இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் அதன் போட்டி பைக்குகளான கேடிஎம் ட்யூக் 390 மற்றும் 390 அட்வென்ஜெர்-ஐ காட்டிலும் குறைவான விலையினை பெற்றுள்ளன. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளின் தயாரிப்பு பணிகள் பிஎம்டபிள்யூ மோட்டோராடின் டிவிஎஸ் நிறுவனத்துடனான கூட்டணியினால் டிவிஎஸ்-ன் ஓசூர் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளை வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.4,500 மற்றும் ரூ.5,500 என்ற குறைந்த மாதத்தவணை திட்டத்தின் மூலமாகவும் வாங்கலாம். மேலும் இந்த பைக்குகளுக்கு மூன்று வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட கிமீ தூரத்திற்கு பைக் இயங்கிருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

அதுமட்டுமில்லாமல் இந்த உத்தரவாத காலத்தை ரூ.16,250 என்ற கூடுதல் தொகையுடன் ஐந்து வருடம் வரையிலும் வாடிக்கையாளர்கள் நீட்டித்து கொள்ள முடியும். அதிலும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் உத்தரவாத காலம் வெறும் ரூ.5,499 என்ற விலையில் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் என்ற இரு பைக்குகளும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்று வந்துள்ளன. இதில் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி ஹெட் & டெயில்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இவற்றுடன் ரைட்-பை-வயர் தொழிற்நுட்பங்கள், புதிய பக்கவாட்டு பேனல்கள் மற்றும் கிராஃபிக்ஸையும் புதிய நிறத்தேர்வுகளுடன் இந்த பைக்குகள் ஏற்றுள்ளன. ஜி310 ஆர் பைக்கிற்கு காஸ்மிக் கருப்பு, போலார் வெள்ளை மற்றும் சுண்ணாம்பு உலோகத்தில் ‘ஸ்டைல் ஸ்போர்ட்' என்ற வண்ணங்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் கடைசி ‘ஸ்டைல் ஸ்போர்ட்' நிறத்தேர்விற்கு வாடிக்கையாளர் கூடுதலாக ரூ.10,000-ஐ செலுத்த வேண்டும்.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

தற்போது டெலிவிரி செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ ஜி310 எஸ் பைக்கிற்கு போலார் வெள்ளை, ‘ஜிஎஸ் பிராண்டின் 40 வருட பயணத்தை நினைவுக்கூறும் விதமாக காஸ்மிக் கருப்பு மற்றும் கயனைட் நீல மெட்டாலிக் நிறத்தில் ‘ஸ்டைல் ரால்யே' உள்ளிட்ட நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளிலும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 313சிசி, வாட்டர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்! முதல் வாடிக்கையாளர் இவர்தான்

இந்த என்ஜின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 17.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பைக்குகளின் அதிகப்பட்ச வேகம் 143kmph ஆகும். ஜி310 ஆர்-ல் இருந்து ஜி310 ஜிஎஸ் பைக் டைனாமிக் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் என்ற சில அம்சங்களில் வேறுபடுகிறது.

Most Read Articles

English summary
2020 BMW G 310 GS First Owner Takes Delivery In Mumbai
Story first published: Thursday, October 22, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X