2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

2021ல் பெனெல்லி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள டிஎன்டி 600ஐ பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் முழு விபர குறிப்புகளுடன் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

இதன்படி பார்க்கும்போது இந்த பைக் மாடல் புதிய டிசைன் அமைப்பை பெற்றிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக இதன் முன்பக்க ஃபேஸியா முற்றிலும் புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த லீக் புகைப்படங்கள் சீனாவில் இந்த வருடத்தில் அறிமுகமான 2020 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கை காட்டிலும் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும்.

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

முன்புறத்தில் புதிய டிசைனில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள 2021 டிஎன்டி 600ஐ பைக்கின் பக்கவாட்டு இருபுறமும் ஹை மற்றும் லோ பீம்களுக்காக இரு ப்ரோஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை டிஎன்டி 600ஐ பைக் பெற்றுள்ளது.

MOST READ: ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

இதனுடன் முந்தைய தலைமுறை பைக்கில் இருந்து ரீ-டிசைனில் எரிபொருள் டேங்க் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த தோற்றம் ஸ்போர்ட்டியாகவும், கூர்மையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பின்புறம் சற்று சிறியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

இவற்றுடன் இருக்கை டிசைனும் அமர்வதற்கு ஏற்ற வகையில் வித்தியாசமான டிசைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் அமைப்பு சிறிய அளவில் பின்புற ஸ்விங்கார்மிற்கு அருகாமையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தலைமுறை பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட் சிஸ்டம் இருக்கைகளுக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் அதன் வலிமையான எக்ஸாஸ்ட் அமைப்பின் மூலமாக தான் கவனிக்கத்தக்கதாக மாடலாக பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கமான எக்ஸாஸ்ட் சத்தத்தை இந்த புதிய தலைமுறை பைக்கிலும் எதிர்பார்க்கலாம். மற்ற முக்கிய மாற்றங்களாக இந்த அடுத்த தலைமுறை பெனெல்லி பைக்கில் லைசன்ஸ் பிளேட்களுடன் புதிய டயர்-ஹக்கர், செங்குத்தாக பொருத்தப்பட்ட ரியர்-டர்ன் இண்ட்கேட்டர்கள் உள்ளிட்டவை உள்ளன.

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

இவை மட்டுமின்றி மோனோ-ஷாக் சஸ்பென்ஷனின் பொசிஷனும் இந்த புதிய தலைமுறை பைக்கில் மாற்றப்பட்டுள்ளது. மற்றப்படி முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. ப்ரேக்கிங்கிற்கு இந்த பைக்கில் முன் சக்கரத்தில் ட்வின் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் யூனிட் டிஸ்க்கும் உள்ளது.

MOST READ: சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு! மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

தற்போதைய பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கில் இரு சக்கரங்களிலும் சிங்கிள்-டிஸ்க் ப்ரேக் தான் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்கத்திற்கு 2021 டிஎன்டி 600ஐ பைக், 4-சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 81 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க் திறனையும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும்.

MOST READ: இளைஞர்களை கவர்வதற்காக ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் உடன் வரும் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 பைக்...

2021 பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் முழு விபரங்கள் ஸ்பை புகைப்படங்களுடன் வெளிவந்தது..!

கூர்மையான மற்றும் மாடர்னான டிசைன் அமைப்பை புதிய தலைமுறை பெனெல்லி டிஎன்டி 600ஐ கொண்டிருந்தாலும், இருக்கை அடியில் ட்யூல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இந்த மாற்றத்தை பெனெல்லி ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங்களில் பைக்கின் தோற்றம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. எனவே இந்த பைக்கில் அறிமுகத்திற்கு முன்னதாக வேறு சில அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

Source: Indianautosblog

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
2021 Benelli TNT 600i Spy Pics: New Design Patent Document Leaked
Story first published: Saturday, April 11, 2020, 21:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X