லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

டுகாட்டி நிறுவனம் லிமிடேட் எண்ணிக்கையில் டுகாட்டி டியாவெல் 1260 லம்போர்கினி எடிசனை 2021ஆம் ஆண்டிற்காக தயாரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உலகளவில் பரீட்சையமான டுகாட்டி அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியில் (இபிஏ) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்த லிமிடேட் எடிசனின் பெயர் உள்ளது.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

டியாவெல் 1260 பைக்கின் புதிய லம்போர்கினி எடிசன் ஆனது 2021 டுகாட்டி டியாவெல் மற்றும் டியாவெல் 1260எஸ் வேரியண்ட்களுடன் விற்பனையை துவங்கவுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள மூன்று டுகாட்டி பைக் மாடல்களும் அமெரிக்க சந்தையில் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகமாகவுள்ளன.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

வழக்கமான டியாவெல் 1260 பைக்கில் இருந்து வேறுபடுவதற்காக லம்போர்கினி பெயர் மற்றும் முத்திரையை பெறவுள்ள இதன் லிமிடேட் எடிசனில் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றே தெரிகிறது. டுகாட்டி மற்றும் லம்போர்கினி என்ற இரு ப்ராண்ட்களும் பெரிய ஃபோக்ஸ்வேகனின் க்ருப்பில் தான் அங்கங்களாக உள்ளன.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

இதன் விளைவாக புதிய டியாவெல் 1260 லம்போர்கினி எடிசன் உருவாகுவதால் இதன் விற்பனைக்கு இந்த இரு ப்ராண்ட்களுக்கு இடையேயான சில துணை நிறுவனங்கள் உதவி புரியும். இபிஏ ஆவணத்தில் புதிய லம்போர்கினி எடிசனில் அதே லிக்யூடு-கூல்டு, 1,262சிசி டெஸ்டாஸ்ட்ரெட்டா எல்-ட்வின் என்ஜின் டெஸ்மோட்ரோமிக் வால்வு உடன் பொருத்தபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

வழக்கமான டுகாட்டி டியாவெல் 1260 மற்றும் டியாவெல் 1260எஸ் பைக்குகளிலும் பொருத்தப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 157 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரு பைக் மாடல்களில் இருந்து புதிய லம்போர்கினி எடிசன் காஸ்மெட்டிக், புதிய நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸில் மட்டுமே வேறுபடும்.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

ஆனால் அவை குறித்த எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை. இந்த புதிய லிமிடேட் எடிசன் மட்டுமின்றி டுகாட்டி நிறுவனம் 2021ஆம் ஆண்டில் அட்வென்ஜெட் பிரிவிலும், பாரம்பரியமான ஸ்க்ரம்ப்ளர் குடும்பத்திலும் தலா ஒரு பைக் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

இதில் ஒன்றான டுகாட்டி மல்டிஸ்ட்ராடா எண்டூரோ 1260 க்ராண்ட் டூர் பைக் நெடுந்தூர பயணத்திற்கு மட்டுமில்லாமல் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்ற விதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் அறிமுகம் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கின் வருகைக்கு பிறகு இருக்கும்.

லம்போர்கினி உடன் கூட்டணி சேர்ந்த டுகாட்டி... புதிய லிமிடேட் எடிசன் பைக்கை களமிறக்குகின்றன...

ஸ்க்ரம்ப்ளர் குடும்பத்தில் டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 1100 ப்ரோ டார்க் அறிமுகமாகவுள்ளது. டுகாட்டியின் புதிய டியாவெல், மல்டிஸ்ட்ராடா மற்றும் ஸ்க்ரம்ப்ளர் பைக் மாடல்களின் அறிமுகங்கள் சர்வதேச சந்தையில் இந்த வருடத்திற்குள்ளாக இருந்தாலும், இவற்றின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2021 Ducati Diavel 1260 Lamborghini Edition In The Works
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X