Just In
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 11 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவம்... பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்பைவிட குறைந்த எடை, அதிக திறன்... பெயருக்கேற்ற திறனில் 2021 டுகாட்டி மான்ஸ்டர் வெளியீடு... முழு தகவல்!
முன்பைக் காட்டிலும் அதிக எஞ்ஜின் திறன் மற்றும் குறைந்த எடையுடன் 2021 டுகாட்டி மான்ஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இப்பதிவில் காணலாம்.

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், அதன் மான்ஸ்டர் பைக்கை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, 2021ம் ஆண்டிற்கான மாடலாகும். டீசர் மற்றும் புரமோ வீடியோக்களின் மூலம் பைக்கின் மீதான ஆர்வத்தை தூண்டி வந்த டுகாட்டி நிறுவனம் கடைசியாக மான்ஸ்டர் பைக்கை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

விரைவில் இப்பைக்கினை விற்பனைக்கான அறிமுகத்தையும் அது செய்ய இருக்கின்றது. கணிசமான மாற்றங்கள் மற்றும் புதுப்பித்தல்களுடன் இப்பைக் வெளிவந்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் பைக்கின் திறன் மற்றும் கவர்ச்சி தன்மைக் கூட்டும் வகையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பிற எந்த உருமாற்றத்தையும் மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படவில்லை.

2021 டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் செய்யப்பட்டிருக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக புதிய அலுமினிய ஃபிரேம்கள் உள்ளன. இந்த ஒற்றை மாற்றத்தின் மூலம் முந்தைய மான்ஸ்டர் பைக்கைக் காட்டிலும் 2021 மான்ஸ்டர் 4.5 கிலோ வரை எடைக் குறைந்த மாடலாக உருவாகியிருக்கின்றது.

இதேபோன்று பின்புற சப் ஃப்ரேமிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னதாக உலோகத்தினால் காணப்பட்ட இந்த ஃப்ரேம் தற்போது கண்ணாடியால் வலுவூட்டப்பட்ட பாலிமர் மெட்டல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் இரண்டு கிலோ எடைக் குறைந்த பைக்காக 2021 டுகாட்டி மான்ஸ்டர் உருவாகியுள்ளது.

இதுதவிர, எடைக் குறைந்த சக்கரங்கள் மற்றும் ஸ்விங்கார்ம் உள்ளிட்டவையும் புதிய டுகாட்டி டுகாட்டி மான்ஸ்டரை முழுமையாக ஏழு கிலோ வரை எடைக்குறைந்த பைக்காக உருமாற்றியுள்ளது. இந்த எடைக் குறைவால் இப்போது டுகாட்டி மான்ஸ்டர் பைக் முழு இலகுரக பைக்காக மாறியிருக்கின்றது. இதனால், மேலும் அதிக திறனை வெளிப்படுத்தும் பைக்காகவும் இது உருவெடுத்துள்ளது.

அதாவது, முன்னதாக 821 சிசி திறனை மட்டுமே அதிகபட்ச வெளியேற்றி வந்த டுகாட்டி மான்ஸ்டர், இனி 937 சிசி திறன் வரை வெளியேற்றும். அதாவது, எடைக்குறைவினால் தற்போது 111 எச்பி மற்றும் 69 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனை டுகாட்டி மான்ஸ்டர் 2021 பெற்றிருக்கின்றது. இந்த திறனுக்காக டுகாட்டி நிறுவனத்தின் பொறியியலாளர்கள் எஞ்ஜினின் எடையிலும் சில மாற்றத்தைச் செய்திருக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு மாற்றங்களினால் டுகாட்டி மான்ஸ்டர் 821 மாடலைக் காட்டிலும் 18 எடைக்குறைந்த பைக்காக புதிய 2021 டுகாட்டி மான்ஸ்டர் உருவாகியிருக்கின்றது. இதேபோன்று, இதன் இருக்கை உயரம் 32.3 இன்ச்சாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆகையால், எந்த உயரத்தைக் கொண்டவர்களும் புதிய மான்ஸ்டர் பைக்கை மிக சௌகரியமாக இயக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இப்பைக்கில் பாதுகாப்பு அம்சங்களாக பிரெம்போ பிரேக்குகள் (இரு வீல்களிலும்), ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமானவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், வண்ண டிஎஃப்டி திரை பன்முக நிற தேர்வு மற்றும் கஸ்டமைசேஷன் தேர்வு உள்ளிட்டவையும் இப்பைக்கிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

முதலில் இக்கார் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதன் பின்னரே இந்தியா போன்ற பிற நாடுகளிலும் இப்பைக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா சந்தையில் அந்நாட்டு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 11,895 எனும் விலையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8.8 லட்சங்கள் ஆகும்.