அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2021 சிபி1000ஆர் பைக்கின் முதல் டீசர் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த சிறிய கிளிப்பிலிருந்து நாம் கண்டுபிடிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், லிட்டர்-க்ளாஸ் மோட்டார் சைக்கிளான சிபி1000ஆர்-ல் 2021ஆம் ஆண்டிற்காக ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா முழு மாற்றங்களையும் கொண்டுவரவில்லை என்பதாகும்.

அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

இருப்பினும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு சில தோற்ற மாற்றங்களை தயாரிப்பு நிறுவனம் கொண்டுவர முயற்சித்துள்ளதை அறிய முடிகிறது. பெரிய அளவில் எந்த குறையும் இல்லாததால் எல்இடி ஹெட்லைட் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை.

அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

குதிரை லாடம் வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் தான் பைக்கிற்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன. பைக்கின் ஹெட்லேம்ப் அமைப்பை ஹோண்டா சற்று மாற்றியுள்ளது. இதனால் முழு ஹெட்லேம்ப்பும் புதிய கோணத்தில் உள்ளன.

அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

அதேபோல் சிறிய அளவில் புதிய ஃப்ளை திரையையும் ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் பொருத்தியுள்ளது. ஃபோர்க் க்ளாம்ப்கள் சில்வர் நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. ரேடியேட்டர் மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு அடிப்பக்க லைன்களை கொண்ட பக்கவாட்டு தட்டுகளும் சற்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

இவற்றுடன் புதிய அலாய் சக்கரங்களையும் 2021 ஹோண்டா சிபி1000ஆர் பைக் பெற்றுவரலாம் என்பதையும் தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோ வெளிக்காட்டுகிறது. மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் தயாரிப்பு நிறுவனம் கை வைத்திருக்க வாய்ப்பில்லை.

ஹோண்டா சிபி1000ஆர் பைக்கில் 998சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் லிக்யூடு-கூலிங் மற்றும் 16 வால்வுகளுடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-ல் 143.4 பிஎச்பி பவரையும், 8,250 ஆர்பிஎம்-ல் 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக்! அடுத்த ஆண்டில் இந்தியா வருகை

2021 ஹோண்டா சிபி1000ஆர் பைக் வருகிற நவம்பர் மாதம் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த அறிமுக தேதி தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோவின் மூலம் உறுதியாகுகிறது. இதனால் இந்திய ஷோரூம்களை இந்த 1000சிசி பைக் அடுத்த ஆண்டில் வந்தடையலாம்.

Most Read Articles

English summary
2021 Honda CB1000R first official teaser video released
Story first published: Sunday, October 25, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X