புதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

மேம்படுத்ததப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த புதிய மாடல் வரும் நவம்பர் 10ந் தேதி உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ரோட்ஸ்டெர் பாடி ஸ்டைல் மாடலாக சிபி1000ஆரர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து இந்த மாடல் புதிய சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

2021 மாடலாக வர இருக்கும் புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக் பழைய மாடலின் தோற்றத்தை ஒத்திருந்தாலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டுளளன. இதற்காக டீசர் வீடியோவையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

டீசர் மூலமாக இந்த புதிய மாடல் வரும் நவம்பர் 10ந் தேதி உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த பைக்கின் ஹெட்லைட்டில் பெஸல் அலங்கார பாகம், புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் இந்த பைக் வர இருக்கிறது. வண்ணத் தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட உள்ளன.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

புதிய ஹோண்டா சிபி1000ஆர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினஅ பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 143 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸை தக்க வைக்கும்.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

முன்புறத்தில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய இன்வெர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் 310 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 256 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

நேக்கட் ஸ்டைலில் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்!

நேக்கட் பாடி ஸ்டைலில் வரும் இந்த சூப்பர் பைக் அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்த அளவு இந்த பைக்கில் மாற்றங்கள் செய்யப்படாமல், வருவது சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

Most Read Articles

English summary
Honda is all set to reveal the new CB1000R roadster premium bike on 10 November, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X