Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டாவின் 2021 என்சி750எக்ஸ் மற்றும் என்சி750எக்ஸ் டிசிடி பைக்குகள்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?
என்சி750எக்ஸ் மற்றும் என்சி750எக்ஸ் டிசிடி என்ற இரு புதிய மோட்டார்சைக்கிள்களை 2021ஆம் ஆண்டிற்காக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலகளவில் வெளியிட்டுள்ளது. இந்த ஹோண்டா பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா என்சி750எக்ஸ் மோட்டார்சைக்கிள் உலகளவில் முதன்முறையாக கடந்த 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பிரபலமான ஹோண்டா பைக் மாடலாக விளங்கும் இது 2021ஆம் ஆண்டிற்காக குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் 745சிசி இணையான-இரட்டை என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 58.5 பிஎஸ் மற்றும் 69 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸிலும் ஹோண்டா மறுவேலை செய்துள்ளது.

நகர்புற சாலைகளில் வேகமான செயல்பாட்டிற்காக முதல் மூன்று கியர்கள் முன்பை விட தாழ்வாகவும், சிறந்த க்ருஸிங் செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறனிற்காக கடைசி மூன்று கியர்கள் சற்று உயரமாகவும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சவுகரியத்திற்கு 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட், மழை, ஸ்டாண்டர்ட் மற்றும் கஸ்டம் என்ற ரைடிங் மோட்களில் கொண்டுவரப்பட்டுள்ள 2021 என்சி750எக்ஸ் மோட்டார்சைக்கிளில் மூன்று அமைப்புகளுடன் ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் முழு-டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

மற்றப்படி என்சி750எக்ஸ் பைக்கின் தோற்றத்தில் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை. முன்பை காட்டிலும் சற்று உயரம் குறைவாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சஸ்பென்ஷன் முன்பக்கத்தில் 18மிமீ வரையிலும் பின்பக்கத்தில் 30மிமீ வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து இருக்கையின் உயரமும் 30மிமீ குறைக்கப்பட்டுள்ளதால் இது ஆஃப்-ரோடு பிரியர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கும். ஆனால் உயரம் குறைவானவர்களுக்கு மிகவும் ஏற்ற பைக் மாடலாக கொண்டுவரப்பட்டுள்ள 2021 என்சி750எக்ஸ் பைக்கில் யுஎஸ்பி சார்ஜிங் துளை உடன் 23 லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ட்ஷீல்டு சற்று பெரியதாக்கப்பட்டுள்ளது, பைக்கில் உள்ள அனைத்து விளக்குகளும் ப்ரீமியம் உணர்விற்காக எல்இடி தரத்தில் உள்ளன. பைக்கின் மொத்த கெர்ப் எடை 6 கிலோ குறைந்து 214 கிலோவாக கொண்டுவரப்பட்டுள்ளது. 2021 ஹோண்டா என்சி750எக்ஸ் மற்றும் என்சி750எக்ஸ் டிசிடி பைக்குகளின் விலைகள் குறித்த விபரமும் எதுவும் வெளியிடப்படவில்லை.

விற்பனையில் இருக்கும் இதன் முந்தைய தலைமுறையின் விலை யுகே-வில் 7,499 யூரோ (கிட்டத்தட்ட ரூ.7.14 லட்சம்)-ஆக உள்ளது. இந்தியாவில் பிக்விங் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் என்சி750எக்ஸ் பைக் மாடல் நம் நாட்டிலும் விற்பனைக்கு வரலாம்.