இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இந்தோனிஷிய சந்தையில் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்றான ஹோண்டா ஸ்கூப்பியின் அடுத்த தலைமுறை மாடலின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டருக்கு 2010ல் அறிமுகமானதில் இருந்து இந்தோனிஷியாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இதுவரை மட்டும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இந்த நிலையில் புதிய தலைமுறை அப்கிரேடை பெறும் இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை 19.95 மில்லியன் இந்தோனிஷியன் ரூபியா கரென்சி ஆக உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.05 லட்சமாகும். இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் 2021 ஸ்கூட்டி அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் மிகவும் கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இதனால் இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த 2021 ஸ்கூட்டரில் ஹெட்லேம்ப் & டெயில்லேம்ப் ஓவல் வடிவத்திலும், எல்இடி லைட்டிங் சிஸ்டத்துடனும் உள்ளன. ஹோண்டா ஸ்கூப்பி இந்தோனிஷியாவில் ஸ்போர்டி, பேஷன், ஸ்டைலிஷ் மற்றும் ப்ரெஸ்டிஜ் என்ற நான்கு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இவை ஒவ்வொன்றிற்கு பிரத்யேகமான நிறங்கள் வழங்கப்படுகின்றன. சவுகரியத்தை பொறுத்தவரையில், பெரிய 15.4 லிட்டர் சேமிப்பிடத்தை இருக்கைக்கு அடியில் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. ஓட்டுனர் கூடுதல் அடாப்டரின் உதவியில்லாமல் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ள யுஎஸ்பி சார்ஜர் கன்சோல் பாக்ஸில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இவற்றுடன் முன்பக்கத்தில் பல செயல்பாட்டு ஹூக் மற்றும் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருப்பதை எச்சரிக்கும் வசதியையும் ஸ்கூப்பி ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் வழங்கி வருகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 110சிசி, எஸ்ஒஎச்சி, ப்ரோக்ராம்டு ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் என்ஜின் ஹோண்டா ஸ்கூப்பியில் வழங்கப்படுகிறது.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 9.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜினில் இஎஸ்பி தொழிற்நுட்பம் செயல்திறனை அதிகரிப்பது மட்டுமில்லாமல், எரிபொருள் திறனையும் மேம்படுத்தும்.

இந்தோனிஷியாவில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டர், ஸ்கூப்பி 110சிசி-இன் டீசர் வெளியீடு!!

இந்திய சந்தையில் ஸ்கூப்பி ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் நம் நாட்டில் ஹோண்டா பிராண்டில் இருந்து விற்பனையாகும் ஆக்டிவா மிக சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

Most Read Articles

English summary
2021 Honda Scoopy 110cc Scooter unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X