2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

கவாஸாகியின் கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் பைக்குகளை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

கவாஸாகி நிறுவனம் அதன் உலகளாவிய லைன்-அப் முழுவதையும் 2021ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்து வருகிறது. இதன்படி முன்னதாக புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் அதன் ரேசிங் மாடலான நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர்ஆர் பைக்குகளை பற்றிய விபரங்களை நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

இந்த வகையில் தற்போது 2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் பைக்குகளை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவாஸாகியின் நகர்புற மற்றும் ஆஃப்-ரோடு என இரு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ட்யுல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களான இவற்றில் ஒரே மாதிரியான 292சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

இந்த என்ஜின் அமைப்பு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், டிஒஎச்சி மற்றும் 4 வால்வுகள் உள்ளிட்டவற்றை அடக்கியுள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களாக இந்த மோட்டார்சைக்கிள்களில் டிசைன் மற்றும் க்ராஃபிக்ஸ் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

இதில் கவாஸாகி கேஎல்எக்ஸ்300 பைக்கில் ஆஃப்-ரோடு திறனிற்காக ஸ்போக் சக்கரங்களை முன்பக்கத்தில் 21 இன்ச்சிலும் பின்பக்கத்தில் 18 இன்ச்சிலும் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பாக 254மிமீ ட்ராவல் உடன் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் 231மிமீ ட்ராவல் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

இதன் க்ரவுண்ட் க்ளியெரென்ஸ் 249மிமீ ஆக வழங்கப்பட்டுள்ளது. கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம், சூப்பர்மாடல் என்பதற்காக பிரத்யேகமான சில தொகுப்புகளை பெற்றுள்ளது. இதன் முன்பக்க சக்கரம் 17 இன்ச்சில் பெரிய 300மிமீ ரோடார் வழங்கப்படுகிறது.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

இதன் முன்பக்க சஸ்பென்ஷன் 231மிமீ ட்ராவல் உடனும் பின்பக்க சஸ்பென்ஷன் 205 ட்ராவல் உடனும் வழங்கப்படுகிறது. 2021 கேஎல்எக்ஸ் 300எஸ்எம் பைக்கில் பொது சாலைக்கு உகந்த டயர்கள் வழங்கப்படுகின்றன.

2021 கவாஸாகி கேஎல்எக்ஸ் 300 மற்றும் கவாஸாகி கேஎல்எக்ஸ் 300எஸ்எம் மோட்டார்சைக்கிள் வெளியீடு!!

கவாஸாகியின் கேஎல்எக்ஸ் 300 மற்றும் கேஎல்எக்ஸ் 300எஸ்எம் பைக்குகள் தற்சமயம் அமெரிக்காவில் மட்டும்தான் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஐரோப்பிய சந்தைக்கோ அல்லது இந்திய சந்தைக்கோ இவை வருவதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki KLX 300 and Kawasaki KLX 300SM motorcycles unveiled
Story first published: Sunday, December 6, 2020, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X