புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

2021 இசட்250 பைக்கின் விபரங்களையும் தோற்றத்தையும் கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பைக்கை பற்றிய விபரங்கள் இரு புதிய நிறத்தேர்வுகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

புதியதாக இரு நிறங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து பைக்கின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் கருப்பு உடன் காட்டு வாத்தின் நீல நிற ஷேட் மற்றும் மிட்டாயின் சிவப்பு என்ற இரு நிறங்களைதான் தற்போது புதியதாக கவாஸாகி இசட்250 பைக் பெற்றுள்ளது.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

கவாஸாகி இசட்250 பைக்கில் 248சிசி, இணையான-இரட்டை லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 36.5 பிஎச்பி மற்றும் 22.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உதவிக்கு ஸ்லிப்பர்-க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

17 இன்ச் அலாய் சக்கரங்கள் 110 மற்றும் 140 பிரிவு டயர்களுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்த அப்கிரேடும் தற்போது கொண்டுவரப்படவில்லை. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்படுகின்றன.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

ப்ரேக்கிங் பணியை இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் அமைப்புடன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கவாஸாகி இசட்250 பைக் கடந்த 2019ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. அதன்பின் விற்பனை குறைந்ததால் நிறுத்தப்பட்ட இந்த கவாஸாகி 250சிசி பைக் எந்த நேரத்திலும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

ஜப்பான் நாட்டு சந்தையில் இதன் விலை 610,500 யென் ஆக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4.3 லட்சமாகும். இசட்250 பைக்கை தொடர்ந்து ஆறு புதிய மாடல்களை சமீபத்தில் மறைப்புகளுடன் கவாஸாகி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இவை ஒவ்வொன்றாக வருகிற நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து வெளியிடப்படவுள்ளன.

புதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக்! ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல

இந்த புதிய அறிமுகங்கள் குறித்து வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் இந்த 6 பைக்குகளில் குறைந்தது 2 அட்வென்ஜெர் ரக பைக்குகளாவது இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பைக்குகள் குறித்த முழு விபரங்கள் எப்படியிருந்தாலும் வருகிற நவம்பர் 23ஆம் தேதி வெளியாகிவிடும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Z250 revealed with updated colours
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X