Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021ஆம் ஆண்டிற்கான கேடிஎம் ஆர்சி200 பைக் இதுதானா? தொழிற்சாலையில் இருந்து ஸ்பை படம் கசிந்தது
2021 கேடிஎம் ஆர்சி200 பைக்குகளின் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதிப்படுத்தும் ஸ்பை படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனாவினால் உலகமே சற்று ஓய்வு எடுத்தாற்போல் இருந்தாலும், 2020ல் கேடிஎம் சற்று பிசியாகதான் இருந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து இந்த வருடத்தில் 250சிசி மற்றும் 390சிசி-களில் அட்வென்ச்சர் பைக்குகள் வெளிவந்தன.

அதேபோல் ட்யூக்250 மற்றும் ட்யூக் 125 பைக்குகளும் சில சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுள்ளன. ஆனால் கேடிஎம் ஆர்சி பைக்குகள் புதிய பெயிண்ட் தேர்வுகளை தவிர்த்து பெரியளவில் எந்த அப்கிரேட்-ஐயும் இந்த வருடத்தில் பெறவில்லை.

ஆனால் விரைவில் கேடிஎம் ஆர்சி200 பைக் மாடல் சில அப்கிரேட்-ஐ பெறவுள்ளது. இதனை தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படம் உறுதிப்படுத்துகின்றது. இந்த படம் தொழிற்சாலை ஒன்றில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது.

ஆர்சி200 மட்டுமின்றி ஆர்சி125, 250 மற்றும் 390 பைக்குகளுக்கும் அப்கிரேட்-ஐ வருகிற 2021ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அப்டேட்கள் டிசைன் மற்றும் சேசிஸ் மட்டுமில்லாமல் பைக்கின் என்ஜின் அமைப்பிலும் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.

2019 ஐக்மா நிகழ்ச்சியில் 390 அட்வென்ச்சர் காட்சிப்படுத்தப்பட்டதுபோல் இந்த டிசம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய 2020 ஐக்மா கண்காட்சியில் புதிய ஆர்சி வரிசை பைக்குகளை கேடிஎம் காட்சிப்படுத்தி இருக்கும். ஆனால் இம்முறை இந்த நிகழ்ச்சி கொரோனாவினால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தற்போது வெளியாகியுள்ள எந்தவொரு மறைப்பும் இல்லாத 2021 கேடிஎம் ஆர்சி200 பைக்கின் முதல் ஸ்பை படத்தில், பைக் தொழிற்சாலையில் தயாரிப்பு பணியில் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த தொழிற்சாலை பஜாஜ் ஆட்டோவின் புனே தொழிற்சாலையாக இருக்கலாம்.

ஏனெனில் இந்த ஸ்பை படத்தில் ஆர்சி200 பைக்கிற்கு பின்பக்கத்தில் ஹஸ்க்வர்னா பைக்குகளையும் பார்க்க முடிகிறது. இந்தியாவில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்ட்களின் தயாரிப்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பைக்கின் ஹெட்லைட் ட்யூக்200-இல் உள்ளதை போன்று ஹலோஜன் யூனிட்டாக வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை ஹெட்லைட்டை சுற்றிலும் எல்இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பெரிய விஸரும் நம் கண்களுக்கு காட்சியளிக்கிறது.

ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிறத்தில் கிராஃபிக்குகள் பல படிகள் அப்கிரேடாக உள்ளன. இந்த நிறம் மட்டுமின்றி வேறு சில நிறங்களிலும் 2021 ஆர்சி200 பைக் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படத்தை சற்று உற்று பார்த்தால் டிஸ்க் ப்ரேக் அமைப்பு சற்று வித்தியாசப்பட்டுள்ளதை அறியலாம்.

அதாவது சக்கரத்தை பிடித்து கொள்ளும் சக்கர மையத்திற்கு பதிலாக முன்பக்க டிஸ்க் ப்ரேக் ஆனது அலாய் சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பைக்கின் பின்பக்கத்தில் துணை-ஃப்ரேம் புதியதாகவும், எக்ஸாஸ்ட் குழாய் பைக்கின் அடிப்பகுதியிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்கள் பைக்கின் தோற்றம், சக்கரங்கள் மற்றும் விண்ட்ஸ்க்ரீனில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. என்ஜின் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்புகள் குறைவே.

வரும் வாரங்களில் கேடிஎம் நிறுவனத்தால் வெளிக்காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 2021 ஆர்சி200 பைக்கின் விலை தற்போதைய விலையை காட்டிலும் ரூ.10,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.