மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

தயாரிப்பு பணிகளை நிறைவு செய்த நிலையில் 2021 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் ஒன்று சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

சப்-400சிசி ரெட்ரோ மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆதிக்கமே கடந்த சில வருடங்களாக நீடித்து வருகிறது.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

இருப்பினும் ஜாவா, ஹோண்டா சிபி350 பைக்குகளின் வருகையினால் கிளாசிக் 350 பைக்கை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்ளது. இருப்பினும் போட்டி பைக் மாடல்களுக்கு இணையாக இந்த பைக்கில் தொழிற்நுட்ப வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

இதனால்தான் 2021 கிளாசிக் 350 பைக்கை 2020 தீபாவளி பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் கொரோனாவினால் இந்த திட்டம் ரத்தாகி போனது. ஆனால் இந்த 2021 ராயல் என்பீல்டு பைக்கின் அறிமுகம் வரும் வாரங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

ஏனெனில் அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக் தற்போது சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை வீடியோவில் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் வடிவமைப்பை அப்படியே அதன் முந்தைய தலைமுறையில் இருந்து பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

இதனால் இந்த சோதனை கிளாசிக் 350 பைக்கிலும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், பின்பக்கம் பார்க்க உதவும் கண்ணாடி, கண்ணீர்துளி வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள், அகலமாக பொருத்தப்பட்டு பின்பக்க ஃபெண்டர்கள், க்ரோம் ப்ளேட்டட் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

பைக் இயக்கத்தில் உள்ளதால் இதில் ஸ்போக் சக்கரமா அல்லது அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதா என்பது அறிய முடியவில்லை. ஆனால் இந்த சோதனை மாதிரியில் புதிய பாடி பேனல்களை பார்க்க முடிகிறது.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

பிரிவில் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிக்க எல்இடி டிஆர்எல், துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் புதிய பெயிண்ட் தேர்வுகள் 2021 கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்படலாம். மீட்டியோர் 350 பைக்கை போல் இந்த 350சிசி பைக்கிலும் டெயில்லேம்ப் எல்இடி தரத்தில் வழங்கப்பட போவதில்லை.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் அட்வான்ஸான எஸ்ஒஎச்சி செட்அப்-ஐ கொண்ட முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படவுள்ளது. இதனால் புதிய என்ஜின் தற்போதைய என்ஜினை காட்டிலும் ஆக்ஸலரேஷனில் சிறப்பாக செயல்படும் என்பது உறுதி.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 4000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய என்ஜினில் இருந்து அதிர்வுகளும் குறைகாவே வெளிவரும் என தகவல்கள் கூறுகின்றன.

மீட்டியோர் 350-ஐ அறிமுகப்படுத்திய கையோடு, 2021 கிளாசிக் 350 பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு!!

இவற்றுடன் கூடுதல் அப்கிரேடாக ஸ்மார்ட்போன் மூலம் ப்ளூடூத் இணைப்பு வசதியையும் பெற்றுவரலாம் என கூறப்படும் 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Classic 350 Production Spec Spied Undisguised – Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X