650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

2021 ராயல் என்பீல்டு காண்டினெடல் ஜிடி 650 பைக் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் பணிகளின் ஒரு பகுதியாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. என்ன மாதிரியான அப்டேட் இந்த பைக்கில் கொண்டுவரப்படவுள்ளது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

2018ல் ராயல் என்பீல்டு நிறுவனம் முதன்முறையாக இண்டர்செப்டர் மற்றும் காண்டினெண்டல் ஜிடி பைக்குகளை அதன் 650 இரட்டை பைக்குகளாக அறிமுகப்படுத்தியது. ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்ற இந்த 650சிசி பைக்குகள் கணிசமான வாடிக்கையாளர்களை மாதந்தோறும் பெற்று வருகிறது.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

குறிப்பாக இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் வெளிநாட்டு சந்தைகளுக்காகவே இந்த பைக்குகள் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

இந்த நிலையில் விரைவில் பைக்குகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் விதமாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட பைக்குகள் சென்னைக்கு அருகே இசிஆர்-இல் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ளன.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அடுத்த 7 வருடங்களில் புதியதாக 28 மோட்டார்சைக்கிள்களை கொண்டுவரவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் கூறியிருந்தது.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதனால் வரும் வருடங்களில் 3 மாதத்திற்கு ஒரு ராயல் என்பீல்டு பைக்கையாவது எதிர்பார்க்கலாம். இதில் ஒன்றாக 650 ட்வின்ஸ் பைக்குகளின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கொண்டுவரப்படலாம். இந்த 650சிசி பைக்குகள் இதுவரை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றது இல்லை.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக மிக சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்கள், புதிய நிறங்கள் மற்றும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் என்ஜின் அமைப்பு மாற்றம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதனால் வட்ட வடிவிலான ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், ஸ்போக்டு சக்கரங்கள் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் மஃப்லர்கள் போன்றவற்றை இந்த அப்கிரேட் வெர்சனிலும் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் பயணத்திற்கு தேவையான ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் இந்த பைக்குகளில் பார்க்கலாம்.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளில் 648சிசி இணையான-இரட்டை ஆயில்-கூல்டு என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

650சிசி இரட்டை பைக்குகளை அப்கிரேட் செய்யும் ராயல் என்பீல்டு!! புதியதாக என்னென்ன வசதிகள் தெரியுமா?

ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் விலை ரூ.2.66 லட்சமாகவும், காண்டினெடல் ஜிடி650 பைக்கின் விலை ரூ.2.82 லட்சமாகவும் உள்ளது. இந்த விலைகள் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் விலை சற்று உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2021 Royal Enfield 650 Twins Conti GT Spied – Facelift With Tripper Navigation
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X