இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

1940களில் விற்பனையில் இருந்த யூரல் ரேஞ்சர் பைக் மீண்டும் இந்த 21 நூற்றாண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் பக்கவாட்டுடன் கூடிய மோட்டார்சைக்கிள்களை சாலையில் பார்க்க முடிவதில்லை. ஏனெனில் அவை 20ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை, தற்போது அதிகளவில் பயன்படாதவை.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

1940களில் இரண்டாம் போரின் போது இராணுவத்தினர் அதிகளவில் பயன்படுத்திய வாகனங்களுள் இவ்வாறான மோட்டார்சைக்கிள்கள் முக்கியமானவை. இதுதான் அவர்களுக்கு விரைவான போக்குவரத்தாக இருந்தது.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

இத்தகைய மோட்டார்சைக்கிள்களை அந்த சமயத்தில் இருந்து யூரல் என்ற பிராண்ட் அதிகளவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அப்போதில் இருந்து யூரல் இடது கை இயக்கி பைக்குகளை மட்டுமே தயாரிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பைக் இடதுபுறத்திலும், கூடுதலாக சேர்க்கப்படும் பக்கவாட்டு வலதுபுறத்திலும் வைக்கப்படுவது ஆகும்.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

இந்த வடிவம் யூரலின் தாயகமான ரஷ்யா மற்றும் சாலையின் வலது பக்கத்தில் வாகனங்களை இயக்கும் மற்ற நாடுகளுக்கும் மிகவும் பொருத்தமானது. ஆனால் ரேஞ்சரின் சமீபத்திய பதிப்பின் மூலம் இந்த விஷயங்களை யூரல் மாற்ற போகிறது. ஏனெனில் புதிய ரேஞ்சர் வலது கை இயக்ககத்தில் கிடைக்கவுள்ளது.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

அதாவது மோட்டார் சைக்கிள் வலதுபுறத்திலும், பக்கவாட்டு இடதுபுறத்திலும் இருக்கும். மேலும் ரேஞ்சரின் என்ஜின் யூரோ 5-க்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட உள்ளது. இது இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய சந்தைகளுக்கு ஒரு சிறந்த செய்தி, இந்தியாவிற்கும் கூட.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

ஆனால் ரேஞ்சரின் என்ஜினில் எந்த சிறப்பம்சமும் கொண்டுவரப்படவில்லை. அதே ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் 745சிசி பாக்ஸர் என்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 40.7 பிஎஸ் மற்றும் 4,300 ஆர்பிஎம்-ல் 54 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

இந்த என்ஜினின் உதவியுடன் பைக்கை அதிகப்பட்சமாக 105kmph என்ற வேகத்தில் இயக்க முடியும். அதேபோல் மூன்று சக்கரங்களுடன் வழங்கப்படுவதால் யூரல் ரேஞ்சரை பின்பக்கமாகவும் இயக்க முடியும். ஆஃப்-ரோடு பயணங்களுக்காக ரேஞ்சரில் இரு-சக்கர ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

இது என்ஜினின் ஆற்றலை நேரடியாக பைக்கின் பின் சக்கரத்திற்கும் பக்கவாட்டின் சக்கரத்திற்கும் வழங்கும். எலக்ட்ரிக் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட், 19-லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் மூன்று சக்கரங்களுக்கும் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளிட்டவை புதிய ரேஞ்சரில் யூரல் பிராண்ட் வழங்கியுள்ள மற்ற சிறப்பம்சங்களாகும்.

இரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது

புதிய ரேஞ்சர் எந்த விலையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்படும் என்பது போன்ற எந்த விபரத்தையும் தயாரிப்பு நிறுவனம் தற்போது வரையில் வெளியிடவில்லை. தற்போதைய 2-சக்கர ட்ரைவ் யூரல் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் 18,000 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.13.32 லட்சம்) என்ற அளவில் உள்ளன.

Most Read Articles

English summary
Ural Ranger Comes Into The 21st Century
Story first published: Wednesday, December 2, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X