யமஹா நிறுவனத்தின் தயாரிப்பு... வெறும் 125 சிசி பைக்கின் விலையே இவ்வளவு ரூபாயா? ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு...

2021 யமஹா எம்டி125 மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

2021 எம்டி125 (Yamaha MT125) பைக்கை யமஹா நிறுவனம் ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. புதிய வண்ண தேர்வுகளையும், பெரிய எரிபொருள் டேங்க்கையும் இந்த புதிய மாடல் பெற்றுள்ளது. ஆனால் இந்த பைக்கை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பது தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

யமஹா நிறுவனத்தின் எம்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வரிசை பைக்குகளில் எம்டி125 சிறிய மோட்டார்சைக்கிள் ஆகும். ஏற்கனவே கூறியபடி 2021 அப்டேட்டின் ஒரு பகுதியாக புதிய நிறங்களை இந்த பைக் பெற்றுள்ளது. ஸ்ட்ரோம் ஃப்ளூயோ, ஐகான் ப்ளூ மற்றும் டெக் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களுடன் இந்த பைக் வந்துள்ளது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

அத்துடன் இந்த பைக்கில் கண்ணை கவரும் வகையில் பாடி கிராபிக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முழு எல்இடி லைட்டிங் செட்அப் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் எடை 142 கிலோ. அதே சமயம் 11 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

ஆனால் முந்தைய மாடலில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. சந்தையை விட்டு வெளியேறவுள்ள மாடலை காட்டிலும் புதிய மாடலில் சற்றே பெரிய எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் யூரோ-5 விதிகளுக்கு இணக்கமான 124 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பதுடன், ஸ்லிப்பர் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 10,000 ஆர்பிஎம்மில் 14.69 ஹெச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 11.5 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 47.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

பைக்கில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கை யமஹா நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 4,524 பவுண்டு ஸ்டெர்லிங் என்ற விலையில் 2021 யமஹா எம்டி-125 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 4.50 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதை விட பெரிய யமஹா எம்டி15 (Yamaha MT15) மோட்டார்சைக்கிள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு வருமா? 2021 யமஹா எம்டி125 ஐரோப்பாவில் வெளியீடு... விலையை கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் யமஹா எம்டி15 பைக்கில், மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 155 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான யமஹா பைக்குகளில் ஒன்றாக எம்-15 திகழ்ந்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
2021 Yamaha MT125 Unveiled In Europe - All Details Here. Read in Tamil
Story first published: Friday, December 25, 2020, 21:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X