Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டுதான் ராஜா... மலையுடன் மோத முடியாமல் திணறும் போட்டி நிறுவனங்கள்... பக்கத்துல கூட நெருங்க முடியல
251 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமீப காலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது என்பது என்னவோ உண்மைதான். ஹோண்டா, மஹிந்திரா, டிவிஎஸ், யமஹா, பஜாஜ், கேடிஎம், பெனெல்லி, ஜாவா மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்கள், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சவால் அளித்து வருகின்றன.

ஆனால் போட்டி நிறுவனங்களின் சிறப்பான முயற்சிகளுக்கு மத்தியிலும், 251 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டின் ஏப்ரல் - நவம்பர் இடையேயான விற்பனை தரவுகளை பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் எந்தளவிற்கு உள்ளது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த 8 மாத கால அளவில், 251 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 3,11,388 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதில், சுமார் 70 சதவீத விற்பனை எண்ணிக்கை கிளாசிக் 350 என்ற ஒரே ஒரு பைக் மூலமாக கிடைத்துள்ளது. இந்த மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போட்டி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருப்பது பஜாஜ் + கேடிஎம்தான். இந்த இரு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்தே வெறும் 9,870 பைக்குகளை மட்டும்தான் விற்பனை செய்துள்ளன. பஜாஜ் + கேடிஎம் நிறுவனங்களின் மார்க்கெட் ஷேர் வெறும் 3 சதவீதம்தான்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை விளம்பரங்கள் மூலமாக பஜாஜ் நிறுவனம் கேலி செய்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் அவை எதுவும் பஜாஜ் நிறுவனத்திற்கு உதவி செய்யவில்லை. இந்த பட்டியலில் 5,357 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் அடுத்து இருப்பது ஹோண்டா நிறுவனம். ஹோண்டாவின் மார்க்கெட் ஷேர் வெறும் 1.63 சதவீதம் மட்டுமே.

இந்த பட்டியலில் டிவிஎஸ் + பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் நான்காவது இடத்தில் உள்ளன. 2020ம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 2,189 பைக்குகளை மட்டும்தான் விற்பனை செய்துள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து இந்த இரண்டு நிறுவனங்களும் இன்னும் வெகு தொலைவில் உள்ளன.

இந்த நிறுவனங்களின் மார்க்கெட் ஷேர் 1 சதவீதத்திற்கும் குறைவு. சரியாக சொல்வதென்றால் 0.67 சதவீதம். 179 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் மஹிந்திரா அடுத்த இடத்தில் உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் வெறும் 0.05 சதவீதம் மட்டுமே. இந்த காலகட்டத்தில், யமஹா மற்றும் கவாஸாகி ஆகிய நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு ஏப்ரல் - நவம்பர் கால கட்டத்தில், 251 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் 3,28,983 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதில், ராயல் என்பீல்டு விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை மட்டும் 3,11,388. இந்த செக்மெண்ட்டின் மொத்த விற்பனையில் இது சுமாராக 95 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக சொல்வதென்றால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 94.65 சதவீதமாக இருக்கிறது. 251 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் ஜாவா மற்றும் பெனெல்லி விற்பனை எண்ணிக்கை கிடைக்கவில்லை.

எனினும் கடந்த சில மாதங்களாக ஜாவாவின் விற்பனை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 2,500 - 3,000 என்ற அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதைப்பற்றியெல்லாம் ராயல் என்பீல்டு கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதிக்கத்தை தற்போதைக்கு இழப்பதற்கு வாய்ப்பே இல்லை.