புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கிற்கு மிக நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக் இன்று பொது பார்வைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த பைக்கின் மிக முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மார்க்கெட்டை அசைத்து பார்ப்பது மிக கடினமான விஷயம். எனவே, அதனை விட அதிக மதிப்புவாய்ந்ததாக நிலைநிறுத்தும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை ஹைனெஸ் சிபி350 பைக்கில் கொடுத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அவ்வாறு இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் எல்இடி பல்புகள் கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, ரியர் வியூ மிரர்கள் மற்றும் இண்டிகேட்டர்களும் பாரம்பரிய க்ரூஸர் மாடல்களை நினைவூட்டுகின்றன.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான வகையில் ஹேண்டில்பார், இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. க்ரோம் பூச்சுடன் சைலென்சர், கருப்பு வண்ண அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

இந்த பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் முதல்முறையாக புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வந்துள்ளது. இதன்மூலமாக நேவிகேஷன், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பாடல்களை கேட்பதற்கான வாய்ப்புகளை வழங்கும். இதற்கான கட்டுப்பாட்டு வசதி இடதுபுற கைப்பிடியில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

இந்த பைக்கில் ஹசார்டு லைட் சிஸ்டம், டியூவல் ஒயர் த்ராட்டில் கேபிள், எஞ்சினை அணைப்பதற்கான பிரத்யேகமான கில் சுவிட்ச், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், பின்புற டயர் தரைப்பிடிப்பை இழப்பதை உணர்ந்து டார்க் திறனை குறைக்கும் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு வசதியாக இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 348சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் அசிஸ்ட் வசதி கொண்ட 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் ரூ.1.90 லட்சத்தையொட்டி விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலாவதாக மும்பை, குர்கான் நகரங்களில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் மட்டும் இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
All New Honda Highness CB 350 Bike: 6 Important Things You Need To Know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X