ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹார்னெட் 2.0 பைக் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய பைக் மாடல் தான் ஹார்னெட் 2.0. இந்த புதிய ஹோண்டா பைக்கில் 184.4சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

அதிகப்பட்சமாக 17.26 பிஎச்பி மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு சதுர கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு சென்றுள்ள ஹார்னெட் 2.0 பைக்கிற்கான முன்பதிவுகள் ரூ.1,999 என்ற முன்தொகையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

இவற்றுடன் ஹெட்லைட்கள், ப்ரேக் விளக்குகள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் அனைத்தும் எல்இடி விளக்குகள் உடன் வழங்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒற்றை துண்டாக பொருத்தப்பட்டுள்ள ஹேண்டில்பாரில் க்ளிப்-ஆன் பார்கள் இல்லை.

ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

கூர்மையான வடிவத்தில் பெட்ரோல் டேங்க்கை கொண்டுள்ள இந்த பைக்கில் இருக்கை மற்றும் க்ராப் ரெயில்கள் பிளவுப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான எக்ஸாஸ்ட் குழாய் உடன் கேட்டலிடிக் கன்வெர்டர் என்ஜினிற்கு பின்புறத்தில் மறைவாக பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் புத்தம் புதிய ஹார்னெட் 2.0... ஷோரூம்களை வந்தடைந்தது...

டெயில்லைட் ஹார்னெட் 160ஆரில் உள்ளதை போன்று X-வடிவில் வழங்கப்பட்டுள்ளது. ஹார்னெட் 2.0 பைக் ஆனது ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக், சங்க்ரியா சிவப்பு மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் ப்ளாக் மற்றும் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என்ற நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் 276மிமீ மற்றும் 220மிமீ அளவுகளில் வழங்கப்பட்டுள்ளன. பஜாஜ் பல்சர் 180 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 உள்ளிட்டவற்றிற்கு நேரடி போட்டியாக விளங்கும் ஹோண்டா ஹார்னெட் 2.0-வின் விலை ரூ.1.26 லட்சமாக எக்ஸ்ஷோரூமில் உள்ளது.

Most Read Articles

English summary
All New Honda Hornet 2.0 start to arrive at dealerships.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X