Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிவருகிறது 350சிசி-யில் அடுத்த ராயல் என்பீல்டு பைக்!! இந்த தோற்றத்தில் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது!
2021 ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் பைக் மாடல் சிறிய அளவு கொண்ட கிளாசிக் 350 என்ஜின் உடன் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் 200சிசி-இல் இருந்து 500சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் மற்ற நிறுவனங்களுக்கு தலைவராக விளங்கி வருகிறது.

இந்த நிலையை அப்படியே தொடர இந்த நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் புதிய மோட்டார்சைக்கிள்கள் வெளிவந்த வண்ணம்தான் உள்ளன. இதனால் ராயல் என்பீல்டு பைக்குகளை அவ்வப்போது சாலை சோதனைகளில் பார்க்க முடிகிறது.

ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 பைக்கிற்கு அடுத்து புதிய மோட்டார்சைக்கிளை சோதனை ஓட்டங்களில் இந்த நிறுவனம் உட்படுத்தி வருகிறது. இந்த சோதனை மோட்டார்சைக்கிள் பிரபலமான இண்டர்செப்டர் 650 பைக்கின் 350சிசி வெர்சன் போல் தோன்றமளிக்கிறது.

இதனால் இந்த சோதனை மோட்டார்சைக்கிள் இண்டர்செப்டர் 350 என்ற பெயரில் அறிமுகமாகலாம் அல்லது வேறெதாவது புதிய பெயரில் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவரலாம். காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் இந்த சோதனை மாதிரி சில பாகங்களை வழக்கமான இண்டர்செப்டர் 650 பைக்கில் இருந்து பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த படத்தில் பைக்கின் பின்பகுதியை மட்டும் தான் தெளிவாக பார்க்க முடிகிறது. இதில் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள செவ்வகம் வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்களுடன் வால்பகுதி இண்டர்செப்டர் 650-ஐ ஒத்து காணப்படுகிறது.

இருப்பினும் சில வேறுபாடுகளையும் நம்மால் அறிய முடிகிறது. அதாவது, அந்த 650சிசி பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட் அமைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சோதனை பைக்கில் ஒற்றை எக்ஸாஸ்ட்டை மட்டுமே பார்க்க முடிகிறது.

அதேபோல் ராயல் என்பீல்டின் இந்த புதிய 350சிசி பைக்கில் முன்பக்கத்தில் நிலையான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஷாக் அப்சார்பர்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகளும் இந்த பைக்கில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மீட்டியோர் 350 பைக்கில் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ள பயணத்திற்கான வழிக்காட்டி வசதியை இண்டர்செப்டர் 350 பைக்கிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும். வன்பொருள்களை பொருத்தவரையில் இண்டர்செப்டர் 350, விரைவில் வெளிவரவுள்ள புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அதேபோல் என்ஜின் அமைப்பையும் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்படும் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜினை இனடர்செப்டர் 350 பைக் தொடருவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-ல் 20.2 எச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஆனால் இண்டர்செப்டரில் இந்த என்ஜின் மேற்கூறப்பட்டுள்ளதில் இருந்து வேறுப்பட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 650 இரட்டை பைக்குகள் ஏற்கனவே மிகவும் மலிவானதாக உள்ளன. இவை இன்னும் 350சிசி-யில் வெளிவந்தால் நிச்சயம் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் பைக்குகள் அதிகளவில் வாடிக்கையாளர்களை சென்றைடையும்.