300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

2023ஆம் ஆண்டிற்குள் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி390 பைக்குகளுக்கு போட்டி மாடல்களை அப்ரில்லா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

பியாஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்காக கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்துள்ளது. அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மோட்டார்சைக்கிளின் அறிமுகம் மட்டுமின்றி இந்தியாவிற்காக பிராண்டின் புதிய மோட்டார்சைக்கிள் ப்ளாட்ஃபாரத்தை வடிவமைக்கும் பணியிலும் ஈடுப்பட்டு வருவதாக பியாஜியோ தெரிவித்துள்ளது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

இதன்படி அப்ரில்லா பிராண்டில் இருந்து 350சிசி- 450சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள்கள் வெளிவரவுள்ளன. 2022-23களில் வெளிவரவுள்ள இந்த அப்ரில்லா பைக்குகள் தற்சமயம் கான்செப்ட் வடிவில்தான் உள்ளதாகவும் பியாஜியோ நிறுவனம் கூறுகிறது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

இந்த தகவல்களை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் சிஇஒ டியாகோ க்ராஃபி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஆர்எஸ்150 மற்றும் டுவோனோ 150 பைக்குகளை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பியாஜியோ நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

ஆனால் இப்போதுவரையில் இந்த 150சிசி பைக்குகளின் அறிமுகம் குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் பியாஜியோ நிறுவனத்தில் இருந்து வெளிவரவில்லை. ஏனெனில் அவற்றில் இருந்து இந்திய சந்தை அதிக திறன் கொண்ட 300சிசி-400சிசி பைக்குகளுக்கு மாறி வருவதாக இந்த நிறுவனம் நம்புகிறது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

மேலும் இந்த வருங்கால பைக்குகள் இத்தாலியில் உள்ள குழுவினரால் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் அவை இந்தியாவில்தான் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பியாஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

தோற்றத்தில் இந்த மோட்டார்சைக்கிள்களில் டுவோனோ 1100 மற்றும் ஆர்எஸ்வி4 பைக்குகளில் உள்ள இன்-லைன்கள் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் அவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகளை கேடிஎம் 390ட்யூக்/ ஆர்சி390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளுக்கு இணையானதாக பியாஜியோ நிறுவனம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

300சிசி, 400சிசி-யில் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்கள்!! கேடிஎம் 390சிசி பைக்குகளுக்கு தயாராகும் சவால்!

முன்னதாக ஆர்எஸ்660 பைக்கின் இந்திய அறிமுகத்தை பியாஜியோ உறுதிப்படுத்தி இருந்தது. 2021ஆம் ஆண்டின் மத்தியில் சிபியூ முறையில் இந்தியாவில் இறக்குமதியாகவுள்ள இந்த அப்ரில்லா பைக்கிற்கு கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.

Note: Images are representative purpose only.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia to launch KTM 390 Duke, RC 390 rivals in India by 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X