அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

மினி இ-ஸ்கூட்டர் ஒன்றை அப்ரில்லா நிறுவனம் உலகளவிலான வெளியீட்டை இன்று செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

பிரபல இருசக்கர வாகன தாயரிப்பு நிறுவனமான அப்ரில்லா புதிதாக ஸ்கேட்டர் உருவத்திலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இஎஸ்ஆர்1 (eSR1) எனும் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டரை புகைப்படத்தின் வாயிலாகவே அப்ரில்லா அறிமுகம் செய்துள்ளது.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

இதனடிப்படையில், ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த வேகத்தில் இந்த ஸ்கூட்டரை நகர பயன்பாட்டை மையப்படுத்தி அப்ரில்லா வடிவமைத்துள்ளது. இதில், 350வாட் பிரஷ்லெஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

இது மணிக்கு 20 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்லக்கூடியது. இத்துடன், அதிகபட்சமாக 280Wh திறனை வெளிப்படுத்தக்கூடிய கழட்டி மாட்டும் வசதியுடைய பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை சார்ஜ் செய்வது மிகவும் சுலபம்.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

மேலும், சார்ஜ் தீர்ந்துவிட்டால் பேட்டரியை வெளியேற்றி விட்டு முழுமையான சார்ஜைக் கொண்ட பேட்டரியைப் பயன்படுத்தி ஸ்கூட்டரை மீண்டும் இயக்க முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 29 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

புதிய அப்ரில்லா இஎஸ்ஆர்1 மினி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் மிகவும் சிறியது என்பதால் இதனை நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலைகளில்கூட மிக சுலபமாகப் பயன்படுத்த முடியும். இதில், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக சிங்கிள் டிஸ்க் பிரேக் பின்பக்க வீலிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

இது ஓர் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இந்த சிறப்பு வசதிகளைக் கொண்ட மினி ஸ்கூட்டரையே அப்ரில்லா உலகின் குறிப்பிட்ட நாடுகளுக்காக மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதில், முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே மினி ஸ்கூட்டர் அறிமகம் செய்யப்பட இருக்கின்றது.

அப்ரில்லாவின் மினி இ-ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு... இந்தியாவுக்கு வருமா இந்த வாகனம்? தகவல் உள்ளே!!

அங்கு, €659 என்ற விலையிலேயே விற்பனைக்கு வரவிருக்கின்றது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ஆகும். இதன் இந்திய வருகை தற்போது கேள்விக்குறியே. அதேசமயம், இதன் தற்போதைய உலகளவிலான வெளியீடு மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia reveals eSR1 micro electric scooter. Read In Tamil.
Story first published: Thursday, December 24, 2020, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X