ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

பியாஜியோ க்ரூப் ஒரு வழியாக இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

அப்ரில்லா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டை பியாஜியோ க்ரூப் சொந்தமாக கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

இதனால் இந்த அப்ரில்லா பைக் குறித்த அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்றிருந்தவர்களுக்கு இன்ப செய்தியாக, பியாஜியோ இந்த பைக்கின் முன்பதிவுகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த பைக் மாடலாக விளங்கும் என தயாரிப்பு நிறுவனத்தால் புகழப்பட்டுள்ள ஆர்எஸ்660, ஆர்எஸ்வி4-ஐ போன்று தோற்றத்தில் முரட்டுத்தனமானதாக இல்லை. புதிய ஆர்எஸ்660 பைக்கில், அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 660சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் தொகுப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் வீலிங் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், ஐந்து ரைடிங் மோட்கள் மற்றும் இரு-வழிகளில் விரைவான ஷிஃப்டர் என ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை இந்த பைக்கில் அப்ரில்லா ப்ராண்ட் நிரப்பியுள்ளது.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

இவை மட்டுமின்றி இரு திரை தேர்வுகளுடன் ப்ளூடூத் இணைப்பு கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி திரையும் இந்த அப்ரில்லா பைக்கில் எதிர்பார்க்கலாம். சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் தலைக்கீழான கயாபா ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

ப்ரேக்கிங் பணியை கவனிக்க ப்ரெம்போ, இரட்டை 320மிமீ டிஸ்க் ப்ரேக் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்660 பைக்கிற்கு மேட் கருப்பு நிறத்துடன் சிவப்பு & பர்பிள் நிறத்துடன் சிவப்பு என்ற இரு நிறத்தேர்வுகள் ஆர்எஸ்250 பைக் மாடலில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.

ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்குகிறது... டீசர் மூலம் உறுதிப்படுத்திய அப்ரில்லா...

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கிற்கான முன்பதிவுகள் முதலாவதாக வருகிற அக்டோபரில் சில ஐரோப்பிய நாடுகளில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கே அப்போது தான் என்றால், இந்தியாவிற்கு அடுத்த வருடத்தில் தான். பைக்கின் எக்ஸ்ஷோரும் விலையை மிகவும் கவர்ச்சிகரமானதாக ரூ.10 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia RS 600 Bookings Open Teaser
Story first published: Wednesday, August 19, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X