அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா தனது பிரபலமான ஆர்எஸ்வி4 மாடலின் 1100சிசி ஃபேக்ட்ரி வெர்சன் பைக்கை ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியின் மூலமாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.22.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

அப்ரில்லா ஆர்எஸ்வி4 மாடல் சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் இந்த அப்டேட் வெர்சனை பெற்றிருந்தது. இதனால் ஏற்கனவே உலக சந்தையில் விற்பனையாகி வருகின்ற இந்த புதிய வெர்சன் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் முதன்முதலாக இந்திய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வந்துள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த ஆர்எஸ்வி4 1100 ஆர்எஃப் சூப்பர் பைக்கில் 1,100சிசி வி4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஏற்கனவே அப்ரில்லா டுயோனோ 1100 பைக்கில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆர்எஸ்வி4 1100 பைக்கில் இந்த என்ஜின் 81மிமீ அதிகரிக்கப்பட்டு கூலிங்கிற்காக புதியதாக ஆயில் பம்ப் மற்றும் துணை ஆயில் இன்ஜெக்டரை பெற்றுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

இதனால் பைக்கின் இசியூ மற்றும் கியரிங்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த அப்டேட் செய்யப்ப்பட்ட என்ஜின் 13,200 ஆர்பிஎம்-ல் 217 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 122 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக இந்த சூப்பர் பைக்கிற்கு வழங்கவுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

என்ஜின் மட்டுமில்லாமல், இந்த ஆர்எஸ்வி4 1100 ஆர்எஃப் பைக்கின் ஃப்ரேம்களும் சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் டாப் வேரியண்ட், ஹோலின்ஸ் நிறுவனத்தின் நிக்ஸ் ஃபோர்க்ஸ் மற்றும் மோனோஷாக்கை பெறவுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

இவை மட்டுமின்றி ஹோலின்ஸ் நிறுவனத்தின் ஸ்டேரிங் டம்பரும் இந்த புதிய பைக்கின் விலை அதிகமான வேரியண்ட்டிற்கு கொடுக்கப்படவுள்ளது. ப்ரேக்கிங்கிற்கு அப்ரில்லாவின் இந்த ஆர்எஸ்வி4 1100 ஆர்எஃப் பைக்கில் ப்ரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

இவைகளுடன் அப்ரில்லா நிறுவனம் நிறுத்தவில்லை. மாறாக, கார்பன்-ஃபைப்பர் மோட்டோஜிபி வகையிலான ஏரோ விங்லெட்ஸ் மற்றும் டைட்டானியம் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றையும் நிலையாக இந்த புதிய பைக்கில் பொருத்தியுள்ளது. முழு பெட்ரோலுடன் இருக்கும்போது இந்த பைக்கின் எடை 199 கிலோவாகும்.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

அப்ரில்லா நிறுவனத்தின் APRC (அப்ரில்லா செயல்திறன் ரைட் கண்ட்ரோல்) அமைப்பும் இந்த பைக்கில் உள்ளது. இந்த அமைப்பில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்பீடு லிமிட்டர் போன்றவை அடங்கும்.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

இந்த கண்ட்ரோல்களை ஓட்டுனர் முழுவதும் அணைத்து வைக்கவும் முடியும். அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஆர்எஃப் பைக்கின் என்ஜின் தற்போதைக்கு பிஎஸ்4 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த பைக்கை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வரை மட்டுமே அப்ரில்லா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியும்.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்ட்ரி சூப்பர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

முன்னதாக கடந்த வருட இறுதியில், மிக பெரிய பைக்குகள் மீது எங்களது கவனம் இல்லை. இதனால் அவை வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தான் விற்பனைக்கு கிடைக்கும் என அப்ரில்லா நிறுவனம் கூறியிருந்தது. தற்போது சந்தைக்கு வந்துள்ள இந்த புதிய ஆர்எஸ்வி4 1100 ஆர்எஃப் பைக்கிற்கான காத்திருப்பு கால அளவு 45 நாட்கள் ஆகும்.

Most Read Articles

English summary
Aprilia 1100 factory Unveiled At Auto Expo
Story first published: Friday, February 7, 2020, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X