Just In
- 24 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பரான ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டருக்காக வெயிட்டிங்கா? உங்களுக்குத்தான் இந்த செய்தி
பிரம்மாண்ட தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர் மற்றும் சூப்பர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை மிக வலுவானதாக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பல புதிய ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, எஸ்எக்ஸ்ஆர்160 என்ற பிரம்மாண்ட தோற்றம் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆகஸ்ட்- செப்டம்பர் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் இதன் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் மட்டுமின்றி, எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் முகப்பு மிகவும் பிரம்மாண்டமான அப்ரான் அமைப்புடன் கவர்கிறது. பிளவுபட்ட க்ளஸ்ட்டர்கள் கொண்ட் ஹெட்லைட் அமைப்பு மற்றும் பகல்நேர விளக்குகள், பெரிய வைசர் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள், வலிமையான தோற்றத்தை வழங்கும் புகைப்போக்கிக் குழாய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அகலமான இருக்கைகள், யுஎஸ்பி சார்ஜர், வசதியான ஸ்டோரேஜ் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பிஎஸ6 தரத்திற்கு இணையான 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.8 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் இருக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படும்.