Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் உற்பத்தி விரைவில் துவங்குகிறது
ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்கப்பட உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரின் புதிய வண்ணத் தேர்வையும் ஏப்ரிலியா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா என இரண்டு பிராண்டுகளில் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதில், ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் டிசைன் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வை வழங்கும் விதத்தில், மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்தது. இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், எஸ்எக்ஸ்ஆர்160 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டரை காட்சிப்படுத்தி இருந்தது.

இந்த ஸ்கூட்டர் மீது அதிக பார்வைகள் விழுந்ததால், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் முடிவு செய்தது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் தள்ளிப்போனது.

இந்த சூழலில், தற்போது ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக, பியாஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகே பாரமதியில் உள்ள பியாஜியோ ஆலையில் இந்த புதிய ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் சிவப்பு வண்ணத் தேர்வு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஸ்கூட்டரில் நீல வண்ணத் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 160சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.8 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இதன் முகப்பு மிரட்டலாகவும், அதே நேரத்தில் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, டின்ட் செய்யப்பட்ட வைசர், அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான சைலென்சர் அமைப்பு ஆகியவை இதன் மேக்ஸி ரக அந்தஸ்தை எளிதாக பெற்றுத் தருகிறது.

இந்த ஸ்கூட்டரில் வசதியான இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. எளிதாக இயக்கும் தொடு உணர் சுவிட்சுகள், சரியான உயரத்தில் ஹேண்டில்பார், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்்டடர், யுஎஸ்பி சார்ஜர், மொபைல்போனை இணைக்கும் கனெக்ட்டிவிட்டி வசதி ஆகியவைும் பயணத்தை மிகச் சிறப்பானதாக மாற்றும் என்று நம்பலாம்.