இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு!!

புதிய அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கு விரைவில் புக்கிங் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

அப்ரில்லா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் எஸ்எக்ஸ்ஆர் 160 மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அடுத்த மாதம் விற்பனைக்கான அறிமுகத்தை இந்த ஸ்கூட்டர் பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வருகின்ற வெள்ளி (டிசம்பர் 11) முதல் புதிய ஸ்கூட்டருக்கான புக்கிங் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக புக்கிங் நடைபெறும் என அப்ரில்லா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் உற்பத்தி பணி மிக சமீபத்திலேயே தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மிக விரைவில் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

இந்த நிலையிலேயே தற்போது நாளை மறு நாள் முதல் ஸ்கூட்டருக்கான புக்கிங் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. நடப்பாண்டே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருந்தது. ஆனால், கோவிட் 19 வைரஸால் உருவாகிய இக்கட்டான சூழ்நிலை இதன் அறிமுகத்தை அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைத்தது.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

புதிய அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரின் விலை பற்றிய தகவல் இதுவரை தெரியவரவில்லை. இருப்பினும், 1.30 லட்சம் ரூபாய்க்குள் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 போன்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

முழுமையான டிஜிட்டல் திறன் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதுமட்டுமின்றி, சற்று உயரமான ஹேண்டில் பார், 12 இன்ச் அளவுள்ள வீல் மற்றும் இருக்கைக்கு அடியில் மிகப்பெரிய ஸ்டோரேஜ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவையும் இதில் இடம்பெற இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டருக்காக ரொம்ப நாளா காத்திருக்கீங்களா... இதோ ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் வந்தாச்சு! இன்னும் ஒரே நாள்தான் காத்திருங்க!

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் 160 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய 3 வால்வ், சிங்கிள் சிலிண்டர், ப்யூவல் இன்ஜெக்ஷன் திறன் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10.7 எச்பி பவரையும், 11.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் சிவிடி வேகக்கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும்.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia SXR 160 Scooter Bookings Open On Coming Friday. Read In Tamil.
Story first published: Wednesday, December 9, 2020, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X