Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மேக்ஸி-ஸ்கூட்டருன்னா இப்படி இருக்கனும்!! ஷோரூமில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160...
அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் வளாகத்தில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பியாஜியோ க்ரூப் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் மாடலை விரைவில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கடந்த சில வாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த மேக்ஸி-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ரூ.5000 என்ற முன் தொகையுடன் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது இந்த அப்ரில்லா ஸ்கூட்டர் டீலர்ஷிப் ஷோரூம்களை சென்றடைய துவங்கியுள்ளது.
இதுகுறித்த வீடியோ விஜேஎன்எஸ் விலாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் தயாரிப்பு பணிகள் மஹாராஷ்டிராவில் உள்ள அப்ரில்லாவின் பரமடி தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் ஒன்றுதான் தற்போதைக்கு முழு மேக்ஸி-ஸ்கூட்டராகும். இத்தாலியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ரில்லா ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவை தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு தடையாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

முன்பக்கத்தில் C- வடிவிலான டிஆர்எல்களுடன் அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளின் ஒத்த பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் டிசைனை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இந்தியாவில் ஸ்கூட்டர்களில் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் (டிஆர்எல்கள்) வழங்கப்படுவது அரிதானதே, ஏன், இல்லை என்று கூட சொல்லலாம்.

ஆனால் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் அத்தகைய விளக்குகளை பெற்று வருகிறது. இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் உள்ள மற்ற அம்சங்கள் என்று பார்த்தால், இயக்கத்தின்போது எதிர்காற்றை தடுக்க முன்பக்கத்தில் பெரிய கண்ணாடியும், பொருட்களுடன் கால்களையும் சவுகரியமாக வைக்கும் வகையிலான ஃபுட்போர்டும் உள்ளன.

ஹேண்டில்பார் நன்கு அகலமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. 12 இன்ச்சில் 5-ஸ்போக் பெடல் மெஷிண்டு அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேகம், பயணத்தூரம் மற்றும் ஏபிஎஸ்-இன் நிலைப்பாட்டை அறிய முழு டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

இது ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை இணைக்கும் விதத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்க 160.03சிசி, 3-வால்வு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7600 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 12 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு பிறகு அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை. இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.