ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

மேக்ஸி ஸ்கூட்டர்

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், பியாஜியோ நிறுவனம் தனது கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா பிராண்டில் புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் கொண்டு வர முடிவு செய்தது. ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் கடந்த பிப்ரவரி மாதமே ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

பியாஜியோ தீவிரம்

இந்த நிலையில், கொரோனாவால் இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் தாமதமான நிலையில், தற்போது வாகன மார்க்கெட் சூடுபிடித்துள்ளதால், உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் பியாஜியோ ஈடுபட்டுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

அறிமுக விபரம்

அண்மையில் பியாஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தற்போது இந்த மாதத்திலேயே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று பைக்வாலே தள செய்தி தெரிவிக்கிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

டிசைன்

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் மிகவும் முரட்டுத்தனமான முகப்புத் தோற்றதுடன் காட்சி தருகிறது. முன்பகுதியில் பெரிய அப்ரான் அமைப்பு, அதனில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பெரிய விண்ட்ஷீல்டு போன்றவை இதற்கு பிரம்மாண்டத் தோற்றத்தை வழங்குகிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

எஞ்சின்

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.85 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

சஸ்பென்ஷன்

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரில் முன்பறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது

எதிர்பார்க்கும் விலை

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டருக்கு ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக வரும் என்று தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Italian vehicle maker, Piaggio is gearing up to launch all-new Aprilia SXT160 maxi-scooter in India very soon.
Story first published: Tuesday, December 8, 2020, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X