சும்மா கெத்தா போகணுமா... அப்ப இந்த புது ஏப்ரிலியா ஸ்கூட்டரை உடனே புக் பண்ணுங்க!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு இந்தியாவில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனி வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துள்ளது. ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் தனித்துவமான டிசைனுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வை வழங்கும் விதத்தில், எஸ்எக்ஸ்ஆர்160 என்ற 'மேக்ஸி' ரக ஸ்கூட்டர் மாடலை விரைவில் கொண்டு வர இருக்கிறது ஏப்ரிலியா.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனாவால் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டு வந்தது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இந்த நிலையில், கொரோனா பிடியிலிருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை விரைவாக மீண்டு வரும் நிலையில், இதுதான் தக்க சமயம் என்று கருதி எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் மாடலை விரைந்து விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஏப்ரிலியா.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

மிக விரைவில் சந்தைக்கு வரும் இந்த ஸ்கூட்டரின் உற்பத்திப் பணிகள் பாரமதியில் உள்ள ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. உற்பத்தி துவங்கிய கையுடன் உடனடியாக இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள ஏப்ரிலியா டீலர்களிலும், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

மிக அட்டாகசமான டிசைன் அம்சங்களுடன் பிரம்மாண்ட முகப்புடன் வசீகரிக்கிறது ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர். மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பிரம்மாண்டம் இதன் முகப்பிலேயே கிடைத்துவிடுகிறது.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

முகப்பில் பெரிய வைசர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் முகப்பு வசீகரிக்கிறது. எலஇடி டெயில் லைட்டுகள், ஏராளமான டிசைன் அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைக்கும் வசதி, வசதியான பெரிய இருக்கைகள், எல்இடி டெயில் லைட் உள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரில் 160சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 10.5 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இந்த பிரிமீயம் வகை ஸ்கூட்டர் மாடலில் முன்புறத்தில் 30 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 140 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் 12 அங்குல சக்கரங்களும், ட்யூப்லெஸ் டயர்களும் உள்ளன.

ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் க்ளாஸி ரெட், மேட் புளூ, க்ளாஸி ஒயிட் மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படும். இந்த ஸ்கூட்டர் பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்படும் என்பதால், விலை சாதாரண ஸ்கூட்டர் மாடல்களைவிட அதிகமாகவே இருக்கும்.

Most Read Articles

மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Piaggio has announced the start of pre-bookings for its Aprilia SXR 160 premium scooter in the Indian market. The new Aprilia SXR 160 scooter can now be booked online or at any of the brand's dealerships for an amount of Rs 5,000. The premium scooter is expected to go on sale in the country in the coming weeks.
Story first published: Friday, December 11, 2020, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X