புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்... பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்!

பிரம்மாண்ட தோற்றம் கொண்ட புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ரக ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு புதிய ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இது மிகச்  சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், சந்தையில் ஏராளமான மாடல்கள் குவிந்துவிட்டன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குவதில் வாகன நிறுவனங்கள் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த வகையில், ஐரோப்பாவில் பிரபலமான மேக்ஸி எனப்படும் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இருசக்கர வாகன நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அதன்படி, இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் தனது ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.1.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே, இந்த ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்களை கவர்ந்தது.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

குறிப்பாக, இந்த ஸ்கூட்டரின் முகப்பு அப்ரான் பகுதி மிக பிரம்மாண்டமானத் தோற்றத்தை வழங்குகிறது. இரண்டு அறைகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் அதிக அகலம் மற்றும் நீளம் கொண்ட இருக்கை சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும். பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவையும் இந்த ஸ்கூட்டரின் மதிப்பை உயர்த்துகின்றன.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மூன்று வால்வு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11 எச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் க்ளாஸி ரெட், மேட் புளூ, க்ளாஸி ஒயிட் மற்றும் மேட் பிளாக் ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

பிரம்மாண்டத் தோற்றத்துடன் இந்தியாவின் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாகவும் இந்த புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் வந்துள்ளது. கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் பிரிமீயமான அம்சமாக இருக்கிறது.

 ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.5,000 செலுத்தி ஏப்ரிலியா இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள பியாஜியோ - ஏப்ரிலியா டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாளர் இல்லை.

Most Read Articles

English summary
Piaggio has launched Aprilia SXR160 maxi style scooter in India and priced at Rs.1,25,997 (Ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X