மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

அப்ரில்லா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா விரைவில் எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்த நிலையில் அந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்160 ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டராகும். இது இந்தியாவில் சுசுகி ப்ர்க்மேன் போன்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதனை முதன் முதலாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே அப்ரில்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு எகிரத் தொடங்கியுள்ளது.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

இம்மாதிரியான சூழ்நிலையில் அடுத்த மாதத்திற்கு இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. ஆனால், துள்ளியமான அறிமுக தேதி பற்றி தெரியவரவில்லை. இருப்பினும், டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகமாகலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ரக ஸ்கூட்டர் சென்னையில் ஆன் ரோடில் ரூ. 1.40 லட்சத்திற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.25 லட்சமாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் வேலையில் ரூ. 5000 முன் தொகையில் ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

ஐரோப்பிய வடிவமைப்பு மொழியுடன் களமிறங்கும் இந்த ஸ்கூட்டர் இந்தியர்களின் எதிர்பார்ப்பிற்கு தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரில் 160சிசி திறன் கொண்ட எஞ்ஜினை அப்ரில்லா பயன்படுத்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 11பிஎஸ் மற்றும் 11.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மேக்ஸி ரக அப்ரில்லா ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. ஆவலுக்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்தாச்சு...

இந்த சிறப்பான எஞ்ஜின் திறனுக்கு ஏற்ப அதிக கிரிப்பை வழங்கக்கூடிய டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது மோட்டோ ஸ்கூட்டர்களில் இடம்பெறக்கூடிய டயர்களைப் போன்று காட்சியளிக்கின்றது. இதேபோன்று நவீன ரக சஸ்பென்ஷன், பெரிய ஸ்டோரேஜ் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia Will Launch Maxi-Type SXR 160 Scooter Soon: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Thursday, November 19, 2020, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X