Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...
ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் ஒருவர், 139 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ளன. ஓரளவிற்கு குறைவான விலை, புதிய தொழில்நுட்பங்களின் மூலம் சிறப்பான செயல்திறன் ஆகியவை கிடைப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஆனால் இன்னமும் ஒரு தயக்கம் மட்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதாக மாறவில்லை. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வளவு தூரம் பயணிக்கும்? என்ற ரேஞ்ச் பற்றிய தயக்கம்தான் அது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாது, பொதுவாக மற்ற வகையான எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் மத்தியிலும் இந்த தயக்கம் காணப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பொதுவாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் ரேஞ்ச் நடைமுறையில் கிடைப்பதில்லை. ஆனால் ஏத்தர் 450 (Ather 450) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதில் இருந்து வித்தியாசப்படுகிறது. ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 107 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூறுகிறது.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். ஆனால் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர்கள் பலர், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூறும் 107 கிலோ மீட்டர்கள் என்பதை விட அதிக ரேஞ்ச் கிடைத்திருப்பதாக கடந்த காலங்களில் கூறியுள்ளனர். இந்த வகையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் ஒருவர், ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்த நிலையில், 139 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பெயர் ஹர்ஷவர்தன். தனது அனுபவங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில், அவர் பதிவிட்டுள்ளார். இந்த சாதனை டிரைவிங் ரேஞ்ஜை அடைய வேண்டும் என அவருக்கு எந்த திட்டமும் இல்லை. தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றாக வேண்டும் என்பது மட்டும்தான் அவரது ஒரே இலக்காக இருந்தது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பராமரிப்பு பணிக்காக தனது சொந்த ஊரான சித்தூரில் இருந்து சென்னை நோக்கி காலை 8 மணியளவில் கிளம்பியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் கிளம்பிய நேரத்தில், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100 சதவீதம் சார்ஜ் இருந்தது. அவர் தனது பயணத்தில் பெரும்பாலும், ஈக்கோ மோடில் சராசரியாக 20-25 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மட்டுமே சென்றார்.

இந்த ஒட்டுமொத்த பயணத்தில் அவர் ஓட்டிய டாப் ஸ்பீடு மணிக்கு 35 கிலோ மீட்டர்கள் மட்டுதான். ஏத்தர் டாட் சார்ஜர் மற்றும் சுமார் 2 கிலோ எடையுள்ள பேக் ஆகியவற்றை மட்டுமே அவர் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொண்டு சென்றார். அவரது எடை சுமார் 55 கிலோ. அதிக வேகத்தில் சென்றால், இப்படி ஒரு ரேஞ்ச் கிடைப்பது கடினம் என அவர் கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு, மற்றொரு உரிமையாளர், தனது ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இயக்கி, 84 கிலோ மீட்டர்கள் ரேஞ்ஜை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹர்ஷவர்தனை போல், இவ்வளவு குறைவான வேகத்தில் ஸ்கூட்டரை இயக்குவது நடைமுறையில் ஒரு சிலருக்கு சாத்தியமில்லாத விஷயமாக இருக்கலாம்.
Image Courtesy: HarshaVardhan