ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவிரி பெறுவதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் தயாரிப்புகள் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. நவநாகரீக டிசைன் அம்சங்கள், செயல்திறன், கனெக்ட்டிவிட்டி வசதி என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஸ்கூட்டர்கள் சிறந்த மதிப்பாக உள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

இந்த நிலையில், தனது 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவிரி பெறும் திட்டத்தை ஏத்தர் அறிவித்துள்ளது. இதன்படி, ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களுக்கும் முழுமையாக பணம் கட்டுவதற்கான சிறப்பு வசதியை ஏத்தர் வழங்குகிறது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விரைவாக ஸ்கூட்டரை டெலிவிரி எடுப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். இந்த திட்டத்தின்படி, ஸ்கூட்டருக்கான முழு தொகையையும் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 3 வாரத்திற்குள் ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஏத்தர் உறுதி தெரிவித்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.59 லட்சம் விலையிலும், 450 ப்ளஸ் ஸ்கூட்டர் ரூ.1.40 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளில் திரும்ப நிறுவனத்திடமே ஒப்படைத்தால் 450 எக்ஸ் ஸ்கூட்டருக்கு ரூ.85,000 விலையும், 450 ப்ளஸ் ஸ்கூட்டருக்கு ரூ.75,000 விலையும் வழங்கும் உறுதி திட்டத்தையும் ஏத்தர் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்கள் ஏத்தர் ஸ்கூட்டரை வாங்குவதற்கான கூடுதல் வாய்ப்பை வழங்கும்.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 2.9 kWh லித்தியம் அயான் பேட்டரியும் உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் பயணிக்க முடியும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லாம். இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி!

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே, நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பிற நகரங்களிலும் விரைவாக டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை ஏத்தர் வழங்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
Ather Energy has announced the window to complete the payment process for 450X and 450 Plus in Bengaluru and Chennai. Customers who have pre-booked either of these scooters can complete the full-payment process in both States.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X