2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

இந்தியாவின் முதல் இண்டலிஜெண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி அதன் பிரதான 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021ல் இருந்து நாட்டில் 27 நகரங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

ஏத்தர் எனர்ஜி, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாகும். இதனால் பெங்களூரும் அருகில் உள்ள சென்னையும்தான் இந்த நிறுவனத்தின் பிரதான சந்தையாகும்.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

தயாரிப்பு மாடல்களுக்கு தேவை பல நகரங்களில் அதிகரித்து வருவதால் சந்தையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த ஏத்தர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி கட்டம்-1 விரிவுப்படுத்துதல் திட்டத்தின்படி 16 புதிய நகரங்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

இந்த 16 நகரங்களில் மைசூர், ஹுப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஸ்வர், நாஷிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகப்பட்டினம், கவுகாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

மேலும் நாட்டின் தலைநகர் டெல்லி என்சிஆர், மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து பிராண்டின் கட்டம்-2 விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் சில நகரங்களுக்கு சந்தை விரிவுப்படுத்துதல் பணியினை ஏத்தர் எனர்ஜி மேற்கொள்ளவுள்ளது.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

இவ்வாறு டீலர்ஷிப் ஷோரூம்கள் அதிகரிப்பதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்கள் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை இன்னும் பெறுவது எளிதாகும். மேலும் இந்த புதிய நகரங்கள் லிமிடேட்-எடிசன் சீரிஸ் 1 வாகனத்திற்கும் தகுதி உடையவைகளாகவுள்ளன.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் க்ரே, வெள்ளை & பச்சை என்ற மூன்று நிறங்களில் தேர்வு செய்யலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 6 கிலோவாட்ஸ் பிஎம்எஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.

2021 ஜனவரி முதல் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி!! 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 27 நகரங்களில் கிடைக்குமாம்

இந்த மோட்டாரில் ஐபி67 சான்று பெற்ற 2.9 கிலோவாட்ஸ்.நேரம் பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 26 என்எம் டார்க் திறனை பெற முடியும். டீலர்ஷிப்களை அதிகரிக்கும் அதேவேளையில் சில்லறை கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து ஏத்தர் க்ரிட் என்ற பெயரில் விரைவான இவி சார்ஜிங் நிலையங்களையும் நாடு முழுவதும் ஏத்தர் நிறுவி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #electric scooter
English summary
Ather 450X Electric Scooter To Become Available In 27 Cities By Early 2021: Here Are All Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X