ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. கடைசி லாட்டிற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏத்தர் 450 மாடலானது வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சிறந்த மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையால் ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக, ஏத்தர் 450 ஸ்கூட்டரில் கூடுதல் செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி ஏத்தர் 450எக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் அதிவேகமான செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும் 450எக்ஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இந்த நிலையில், ஏத்தர் 450எக்ஸ் வருகையையடுத்து, தனது 450 எலெக்ரிக் ஸ்கூட்டரை விற்பனையில் இருந்து விலக்க உள்ளதாக ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

மேலும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடைசி கட்ட முன்பதிவு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து முழுமையாக நிறுத்தப்பட இருக்கிறது. இதனை ஏத்தர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இதுவரை ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு அனைத்து வகையான சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்கள் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முன்பதிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1.09 லட்சம் விலையும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.24 லட்சம் ஆன்ரோடு விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இந்த நிலையில், ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சோபிக்காததால், ஏற்கனவே விலக்கப்பட்டுவிட்டது. ஏத்தர் 450 ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் தக்க வைக்கப்பட்டதுடன், சென்னையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

இந்த ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட இருக்கிறது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4kW மின் மோட்டார் 7.25 பிஎச்பி பவரையும், 20.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆனால், 450எக்ஸ் ஸ்கூட்டரில் இருக்கும் 6kW மின் மோட்டார் 8 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் 2.9kW பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் ரைடிங் மோடு இருப்பதுடன், வார்ப் என்ற புதிய ரைடிங் மோடும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏத்தர் 450 ஸ்கூட்டரைவிட புதிய 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரி அதிவேகமாக சார்ஜ் ஏற்றும் திறனுடன் வந்துள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது

ஏத்தர் 450 ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு கிலோமீட்டர் செல்வதற்கான சார்ஜ் ஏற்றுவதற்கு ஒரு நிமிடம் ஆன நிலையில், ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு நிமிடம் சார்ஜ் செய்தால் 1.5 கிலோமீட்டர் தூரம் சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Ather Energy has confirmed 450 electric scooter will be discontinued in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X